எடை இழப்பு குறிப்புகள்: பல நேரங்களில் உடல் எடையை குறைக்க கடினமாக உழைக்கிறோம். சத்துள்ள பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான பழச்சாறுகளை உட்கொள்கிறோம். ஜிம் சென்று பல வித முயற்சிகளை எடுக்கிறோம், உடற்பயிற்சி செய்கிறோம். எனினும், இப்படி பல வித நடவடிக்கைகளை எடுத்தாலும், உடல் எடை குறைவதில்லை. எனினும் சிறிதளவு ஆரோக்கியமற்ற உணவை உட்கொண்டாலும், நாம் செய்யும் கடின உழைப்பு அனைத்தும் வீணாகிவிடும்.
பல சமயங்களில் நாம் நொறுக்குத் தீனி அல்லது ஆரோக்கியமற்ற உணவைச் சாப்பிட்டுவிட்டு, சிறிது சாப்பிட்டால் எதுவும் நடக்காது என்று எண்கிறோம். ஆனால் சிறிது சிறிதாக நாம் சாப்பிடும் இப்படிபட்ட ஆரோக்கியமற்ற உணவுகளும் நம் எடை குறைப்பு செயல்முறையை கெடுத்துவிடும்.
கலோரி நிறைந்த உணவை உட்கொள்வது உடனடி ஆற்றலைத் தருகிறது. ஆனால் எடை இழப்புக்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். உடல் எடையை குறைக்க, நாம் தவிர்க்க வேண்டிய சில உணவுப் பொருட்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
1. பிரஞ்சு ஃப்ரைஸ்
பெரும்பாலான மக்கள் பிரஞ்ச் ஃப்ரைஸ் சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் இவை உங்கள் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவை பதப்படுத்தப்பட்டவை. அவற்றில் நார்ச்சத்து இல்லை. அவற்றில் உள்ள உப்பின் அளவு மிக அதிகம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த உணவு தீங்கு விளைவிக்கும்.
மேலும் படிக்க | Pistachios With Milk: சர்க்கரை நோயை அடக்கி ஆளும் பிஸ்தா பால்
2. குளிர்பானங்கள் மற்றும் எனர்ஜி ட்ரிங்க்ஸ்
சுவையான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் குளிர்பானங்கள், எனர்ஜி ட்ரிங்க்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் ஆகியவற்றில் சர்க்கரை அளவு மிக அதிகமாக உள்ளன. அவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை. இந்த பானங்கள் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறன. இதுமட்டுமல்லாமல், இந்த அதிக கலோரி திரவ உணவுகள் உங்கள் பசியையும் அழித்து விடுகின்றன.
3. பேக்கரி பொருட்கள்
ஜாம்-ஸ்டஃப்டு, சாக்லேட்டி, பவுடர் மற்றும் கிரீமி சர்க்கரை பூசப்பட்ட பேஸ்ட்ரிகள், குக்கீகள், கேக்குகள் மற்றும் டோனட்ஸ் ஆகியவற்றில் மாவு, சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் உள்ளது. இவை உடல் வீக்கத்தை ஏற்படுத்தும். இது மட்டுமின்றி, இவற்றால் உடல் எடை குறைவதற்குப் பதிலாக வேகமாக அதிகரிக்கும்.
4. மதுபானம்
ஆல்கஹால் அதிக கலோரிகளைக் கொண்டுள்ளது. இது பசியின் ஏக்கத்தை தீவிரப்படுத்த வேலை செய்கிறது. ஆல்கஹால் சுமார் 7 கலோரிகளைக் கொண்டுள்ளது. இதில் ஊட்டச்சத்து கூறுகள் இல்லை. பல மது பானங்கள், குறிப்பாக காக்டெய்ல்களில், அதிக சர்க்கரை உள்ளது.
ஆகையால் உடல் அரோக்கியத்தை கெடுப்பதோடு, உடல் எடையை அதிகரிக்கச் செய்யும் இப்படிப்பட்ட உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இந்த துரித, ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்தால், நம் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கும், சில நாட்களில் உடல் எடை குறையும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அடிக்கடி ‘அங்க’ போக தோனுதா, தாகம் எடுக்குதா? ஜாக்கிரதை!! நீரிழிவு நோயாக இருக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ