முடி நரைக்காம கருப்பாவே இருக்க தயிர், உருளைக்கிழங்கு போதும்

வயது அதிகரிக்க அதிகரிக்க, ​​முடி நரைக்கத் தொடங்கும். எனினும், இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் என இவர்களிடமும் இந்த பிரச்சனை காணப்படுகின்றது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 11, 2022, 03:00 PM IST
  • கூந்தல் பராமரிப்பு டிப்ஸ்.
  • முடியை கழுவுவதற்கு இந்த ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தவும்.
  • நரை முடியை இயற்கையாகவே கருமையாக்கலாம்.
 முடி நரைக்காம கருப்பாவே இருக்க தயிர், உருளைக்கிழங்கு போதும் title=

பெரும்பாலான மக்கள் முடி உதிர்தலாலும், வெள்ளை முடியாலும் சிரமப்படுவதை நாம் காண்கிறோம். இதற்கு மாசுபாடு, சீரற்ற உணவு, தூக்கமின்மை எனப் பல காரணங்கள் உள்ளன. அதிலும் இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள், சிறுவர் சிறுமியர் என இவர்களிடமும் இந்த பிரச்சனை காணப்படுகின்றது. இளநரை பிரச்சனைக்கு தவறான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, கூந்தலில் ரசாயனங்களின் பயன்பாடு எனப் பல காரணங்கள் உண்டு. இந்த காரணங்களால், கூந்தல் வயதுக்கு முன்பே வெள்ளையாக மாறத் தொடங்குகிறது.

பொதுவாக நரைமுடி வருவதற்கு மருத்துவரீதியாக முன்மையான காரணம் என்னவென்றால், முடிக்கு கருப்பு நிறத்தை வழங்கும் மெலனின் என்னும் நிறமி குறைவாக இருப்பது தான். இந்த மெலனினானது வயதாக ஆகத் தான் குறைய ஆரம்பிக்கும். ஆனால் தற்போது இந்த மெலனின் சிறு வயதினருக்கே குறைய ஆரம்பித்து நரைமுடியை ஏற்படுத்திவிடுகிறது.  வெள்ளை முடியை கருமையாக்க, நீங்கள் ஹேர் டை அல்லது கெமிக்கல் கலந்த கருப்பு மருதாணி அல்லது கலர் பயன்படுத்தினால், அது முடிக்கு பலனளிப்பதற்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். அதனால்தான் இயற்கை முறைகளை மட்டுமே முயற்சி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்

வெள்ளை முடியை இயற்கையாகவே கருமையாக்க மிகவும் எளிமையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே போக்கலாம். முக்கியமாக இயற்கை வழிகளின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால், எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. அதோடு தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும். எனவே கீழே வெள்ளை முடியை சரிசெய்ய உதவும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

நெல்லிக்காய் ஹேர் பேக்
நெல்லிக்காயில் வைட்டமின் சி மிகுதியாக உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல், செல்லுலார் சேதத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நெல்லிக்காயை உடல் ரீதியாக ஆரோக்கியமாக்குவதோடு, நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் மிகவும் நன்மை பயக்கும். அத்துடன் நெல்லிக்காயில் கால்சியம் அதிகளது உள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கிறது. இது வேரிலிருந்து முடியை வலுப்படுத்துகிறது மற்றும் நரை முடிக்கு சிகிச்சையளிப்பதில் பயன் தரும். 

நெல்லிக்காய் ஹேர் பேக் செய்ய, ஒரு கொத்து கறிவேப்பிலையை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கறிவேப்பிலையுடன் 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பிரமி தூள் சேர்த்து அரைக்கவும். அதிலிருந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை ஹேர் மாஸ்க்காக தலைமுடியில் தடவவும். இந்த பேஸ்ட்டை ஒரு மணி நேரம் அப்படியே வைத்து பின்பு ஷாம்புவால் முடியைக் கழுவவும்.

மேலும் படிக்க | இளம் வயதிலேயே நரைமுடி பிரச்னையா, உடனே இத பண்ணுங்க

உருளைக்கிழங்கு ஹேர் பேக்
உருளைக்கிழங்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது முடியை கருமையாக்க உதவுகிறது. மறுபுறம், தயிர் ஒரு சிறந்த புரோபயாடிக் ஆகும். இது முடியை வேரில் இருந்து வலுவாக்குவதுடன், நரை முடி ஏற்படாமல் தடுக்கிறது. 

உருளைக்கிழங்கு மற்றும் தயிர் மாஸ்க் செய்ய, ஒரு கடாயை நன்கு சூடாக்கி, சில உருளைக்கிழங்கை வேகவைக்கவும். சிறிது நேரம் கழித்து, உருளைக்கிழங்கு தண்ணீரை வடிகட்டி, உருளைக்கிழங்கை ஒதுக்கி வைக்கவும். இந்த உருளைக்கிழங்கு தண்ணீரில் 3 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இந்த கலவையை உங்கள் முடியில் நன்கு தடவவும். சிறிது நேரம் கழித்து, தலைமுடியை தண்ணீரால் கழுவவும்.

ஷிகாகாய் ஹேர் மாஸ்க்
ஆரோக்கியமான கூந்தல் பெற சீகைக்காய் பொடி பயன்படுகிறது. இது ஒரு இயற்கை ஷாம்பு, அத்துடன் இது முடி நரைப்பதைக் குறைக்க மிகவும் பயனுள்ள வழியாகும். சீகைக்காய் பொடி மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதை உச்சந்தலையில் தேய்த்தால் நரை முடி பிரச்சனை ஏற்படாது.

(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News