2018-ல் இந்தியாவின் பொருளாதாரம் 7.4% ஆகா உயரும் -சர்வதேச நாணய நிதியம்

இன்று (புதன்கிழமை) சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் 2018 ஆம் ஆண்டில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்று கூறியுள்ளது.   

Written by - Shiva Murugesan | Last Updated : May 9, 2018, 11:31 AM IST
2018-ல் இந்தியாவின் பொருளாதாரம் 7.4% ஆகா உயரும் -சர்வதேச நாணய நிதியம் title=

இன்று (புதன்கிழமை) சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் 2018 ஆம் ஆண்டில் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்று கூறியுள்ளது. 

சர்வதேச நாணய நிதியம் இன்று ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான பொருளாதார வளர்ச்சி குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியதாவது:- 

பணமதிப்பிழப்பு ஜி.எஸ்.டி., வங்கிகளின் கடன் சுமை போன்றவற்றால் கடந்த ஆண்டு சரிவடைந்த இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டு வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2016 ஆம் ஆண்டு 7.1 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2017 ஆம் ஆண்டு 6.6 சதவீதமாக சரிவடைந்தது. ஆனால் 

வாராக் கடனை குறைத்து, நிதிநிலையை உயர்த்த நடவடிக்கை இந்திய ரிசர்வ் வங்கி எடுத்து வருகின்றன. ஜி.எஸ்.டி-யால் வரி வருவாய் அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் வளரச்சி பாதையை நோக்கி செல்கிறது. இந்த ஆண்டு (2018) 7. 2 சதவீதமாகும், அடுத்த ஆண்டு (2019) 7.4 சதவீதமாகும் உயரும் எனக் கூறப்பட்டு உள்ளது.

தெற்காசியாவில் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் வங்காளதேசம் உள்ளது. இதன் வளர்ச்சி 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் 7% விகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீ லங்கா 2018 ஆம் ஆண்டில் 4 சதவீதமாகவும் 2019 ல் 4.5 சதவீதமாகவும், நேபாளம் 2018-ல் 5 சதவீதமாகவும், 2019-ல் நான்கு சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த அறிக்கையில் பாக்கிஸ்தான் இடம் பெறவில்லை.

ஒட்டுமொத்தமாக, உலகின் வேகமாக வளர்ந்துவரும் பிராந்தியமாகவும், உலக பொருளாதாரத்தின் முக்கிய இயந்திரமாகவும் ஆசியா தொடர்கிறது. ஆசிய பிராந்தியத்தின் வளர்ச்சி விகிதம் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் 5.6 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Trending News