ஓடிப்போன மனைவியை மீட்க கோரி காவல் நிலையத்தில் புகாரளித்த 2 கணவர்கள்!

மனைவி மூன்றாவதாக ஒருவருடன் ஓடிவிட்டதால் அவரது முன்னாள் இரண்டு கணவர்களும் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : Jun 10, 2022, 11:47 AM IST
  • மனைவியை காணவில்லை என 2 கணவர்கள் புகார்.
  • மூன்றாவது நபருடன் ஓடிவிட்டதாக வாக்குமூலம்.
  • என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கும் போலீஸ்.
ஓடிப்போன மனைவியை மீட்க கோரி காவல் நிலையத்தில் புகாரளித்த 2 கணவர்கள்! title=

மகாரஷ்டிர மாநிலத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் இரண்டு நபர்கள் வந்து வித்தியாசமாக புகார் அளித்துள்ள சம்பவம் அப்பகுதியில் சிரிப்பலைகளையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  அதாவது அந்த இரண்டு நபர்களும் ஒன்றாக காவல் நிலையத்திற்கு வந்து தங்கள் இருவரது மனைவி மூன்றாவதாக வேறொருருவருடன் ஓடிவிட்டதாகவும் அவரை மீட்டு தருமாறும் கோரி போலீசில் புகார் அளித்தனர்.  இதனை கேட்ட போலீசார் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து முழுமையாக இருவரிடமும் விசாரணை செய்தனர்.

மேலும் படிக்க | சிகரெட் சாம்பல் முகத்தில் பட்டதை தட்டிக்கேட்ட இளைஞர் கொலை

அந்த பெண் அவரது முதல் கணவரை காதலித்து திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார், இவர்களின் திருமண பந்தத்துக்கு அடையாளமாக இரண்டு குழந்தைகள் உள்ளது.  அந்த பெண்ணுக்கு சில வருடங்கள் கழித்து ஒரு ராங் கால் வந்துள்ளது, அந்த ராங் காலில் இன்னொருவருடன் அந்த பெண் கனெக்ட் ஆகிவிட்டார்.  பின்னர் திருமணமான நான்கு ஆண்டுகளில் முதல் கணவனுக்கு தெரியாமல் வீட்டை விட்டு ஓடிப்போய் ராங் கால் மூலம் கனெக்ட் ஆனவரை கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்திருக்கிறார்.  முதல் கணவர் ஆசாரி வேலை செய்கிறார், இரண்டாவது கணவர் பைபர் தொழில் செய்து வருகிறார்.

இரண்டாவது கணவருடன் சில மாதங்கள் குடும்பம் நடத்தியவர் திடீரென்று ஒரு நாள் தான் ஊருக்கு போய்விட்டு வருவதாக கூறி சென்றிருக்கிறார், சென்றவர் திரும்பி வரவேயில்லை.  பிறகு தான் தெரிந்திருக்கிறது அவருக்கு சமூக ஊடகத்தில் மூன்றாவதாக ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் ஓடிப்போனது.  மனைவியை பிரிந்த சோகத்தில் முதல் கணவர் முழுநேர குடிகாரனாக மாறிவிட்டார், இரண்டாவது கணவர் அவரை தேடி சென்று அழைத்துவந்து, தங்களது மனைவி மூன்றாவதாக ஒருவருடன் ஓடிவிட்டார் அவரை மீட்டு தாருங்கள் என்று போலீசில் புகார் கொடுக்க வந்துள்ளனர்.  அந்த பெண்ணை பிடித்து இப்போது எந்த கணவருடன் சேர்த்து வைப்பது என்கிற குழப்பத்தில் போலீசார் இருந்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சைக்கோ பாணியில் 2 கொடூரக் கொலைகள்.!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News