90 வயது மூதாட்டியை கூட்டு பலாத்காரம் செய்த காம கொடூரர்கள்..!

திரிபுராவில் உள்ள தனது வீட்டில் 90 வயது மூதாட்டியை இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!

Last Updated : Nov 1, 2020, 12:56 PM IST
90 வயது மூதாட்டியை கூட்டு பலாத்காரம் செய்த காம கொடூரர்கள்..! title=

திரிபுராவில் உள்ள தனது வீட்டில் 90 வயது மூதாட்டியை இருவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!

இந்த சம்பவம் அக்டோபர் 24 ஆம் தேதி வடக்கு திரிபுரா மாவட்டத்தின் காஞ்சன்பூர் துணைப்பிரிவில் உள்ள பர்ஹால்டி கிராமத்தில் நடந்தது. ஆனால் அவரது உறவினர்கள் அக்டோபர் 29 அன்று தான் போலீஸ் புகார் அளித்ததாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இருவர் தலைமறைவாக உள்ளதாகவும், அவர்களை கைது செய்ய தேடல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் சூப்பிரண்டு பானுபாதா சக்ரவர்த்தி தெரிவித்தார்.

ALSO READ | ஊருக்கு பிச்சைக்காரி... உள்ளுக்குள் 1.4 கோடிக்கு சொந்தக்காரி போலீசாரால் கைது!!

“குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர், தனது வீட்டில் தனியாக வசித்து வந்த அந்த மூதாட்டியை பாட்டி என்று அழைப்பார். சம்பவம் நடந்த இரவில், அவரும் மற்றொரு ஆணும் வீட்டிற்குள் நுழைந்து வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர்.” என்று அந்த அதிகாரி கூறினார். இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த மூதாட்டி நோய்வாய்ப்பட்டார். ஆனால் அவர் போலீசாருக்கு தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் அறிந்ததும், ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர்கள் புகார் அளித்தனர் என சக்ரவர்த்தி மேலும் கூறினார்.

இந்நிலையில், போலீசார் மூதாட்டியை ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்ததோடு அவரது அறிக்கையையும் பதிவு செய்தனர். இதன் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Trending News