நீரவ் மோடி நிறுவன விளம்பர ஒப்பந்தங்களை ரத்து செய்த பிரியங்கா சோப்ரா

நீரவ் மோடி மீது மோசடி புகார் வந்ததை அடுத்து, அந்நிறுவன பிராண்ட் விளம்பரங்களில் இருந்து விலகிக்கொள்வதாக பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா அறிவித்துள்ளார். 

Last Updated : Feb 23, 2018, 06:25 PM IST
நீரவ் மோடி நிறுவன விளம்பர ஒப்பந்தங்களை ரத்து செய்த பிரியங்கா சோப்ரா title=

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் 1.80 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பண மோசடி நடந்து உள்ளது. இது தொடர்பாக வங்கி நிர்வாகம் சி.பி.ஐ.யிடம் அளித்த அந்த புகாரில் மும்பையை சேர்ந்த பிரபல வைர வியாபாரியும், கோடீஸ்வரர் நிரவ் மோடி நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

இந்த மோசடி குறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்க துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மும்பை, குஜ்ராத், டெல்லி என நாடு முழுவதும் நீரவ் மோடிக்கு சொந்தமான 17 இடங்களில் சோதனை மேற்கொண்டது அமலாக்கத்துறை. இந்த சோதனையின் போது 5 ஆயிரத்து 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், வெள்ளி மற்றும் விலை மதிப்பற்ற வைர கற்களை பறிமுதல் செய்துள்ளனர். முக்கியமான 95 ஆவணங்களைப் பறிமுதல் செய்துள்ளனர் அமலாக்கத்துறை.

மோசடி செய்ததாக தேடப்படும் நிரவ் மோடி குடும்பத்துடன், விஜய் மல்லையா, லலித் மோடி வரிசையில் வெளிநாடு தப்பியிருக்கலாம் என புலனாய்வு அமைப்புகள் கருதுகின்றன. 

இந்நிலையில், நிரவ் மோடி நிறுவனத்தின் மீது மோசடி புகார் வந்ததை அடுத்து, அந்த நிறுவனத்தின் விளம்பரப்படங்களில் நடித்து வந்த பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக வரது செய்தி தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

Trending News