மணிசங்கர் ஐயர் நீக்கம்: "வெல்டன் ராகுல் பையா" வைரலான போஸ்டர்

பிரதமர் மோடியைத் தரம்தாழ்ந்து விமர்சித்த மணிசங்கர் ஐயரை காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார் ராகுல் காந்தி.

Last Updated : Dec 8, 2017, 04:49 PM IST
மணிசங்கர் ஐயர் நீக்கம்: "வெல்டன் ராகுல் பையா" வைரலான போஸ்டர் title=

நேற்று டெல்லி ஜன்பத் சாலையில் அமைந்துள்ளன அம்பேத்கர் சர்வதேச மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்பொழுது பேசிய பிரதமர், நாட்டின் கட்டமைப்புக்கு அம்பேத்கர் செய்த பணிகளை காங்கிரஸ் மறைத்து விட்டது என காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார். பிரதமரின் பேச்சுக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர், பிரதமர் மோடியை "நீச் ஆத்மி" என விமர்சித்தார். "நீச் ஆத்மி" என்பதற்கு பிறப்பால் தாழ்ந்தவன், அதாவது பிறப்பு அடிப்படையில் ஒருவனை தாழ்த்தி பேசுவததாகும். 

நரேந்திர மோடி; சூரத்தில் ஆவேசம்?

மணிசங்கர் அய்யரின் பேச்சு நாடு முழுவது மிகவும் சர்ச்சை கிளப்பியது. பாஜக உட்பட நாட்டின் பல கட்சி தலைவர்கள் இதற்க்கு கண்டனம் தெரிவித்தனர். 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, உடனே மன்னிப்புக் கேட்கும் படி மணிசங்கர் ஐயரிடம் கூறினார். இதனையடுத்து மன்னிப்புக் கேட்டார் மணிசங்கர் ஐயர். பின்னர் மணிசங்கர் ஐயரை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கினார் ராகுல் காந்தி. இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு மணிசங்கர் ஐயருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து ராகுல் காந்தியை பாராட்டி தற்போது ஒரு போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த போஸ்டரை அலகாபாத் காங்கிரஸ் தலைவர் ஹசீப் அகமது வெளியிட்டுள்ளார். அதில் ராகுல் காந்தி ஒரு பேட்ஸ்மேனாக பந்தை அடிப்பது போல காட்டப்பட்டுள்ளார். அந்த பந்தில் மனிஷங்கர் அய்யர் முகம் இருக்கிறது. "வெல்டன் (Well done) ராகுல் பையா" என்றும் எழுதியுள்ளார்.

இந்த போஸ்டரில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா மற்றும் ராஜ்யசபா எம்.பி. பிரமோத் திவாரி ஆகியோரும் காணப்படுகின்றனர்.

குஜராத் தேர்தல் 2017: சர்ச்சை ஏற்படுத்திய போஸ்டர்!!

 

Trending News