நரேந்திர மோடி; சூரத்தில் ஆவேசம்?

காங்கிரஸ்ஸின் உறுப்பினரான அய்யர் என்பவர் பிரதமர் மோடியை "மோசமான மனிதர்" என்று கூறியதற்கு  பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.   

Updated: Dec 7, 2017, 06:16 PM IST
நரேந்திர மோடி; சூரத்தில் ஆவேசம்?
ANI

இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குஜராத் மாநிலத்தில், 33 மாவட்டங்கள், 182 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலதிற்கு வருகிற டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இதில்,முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும்-இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அங்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க. தொடர்ந்து  தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த மூன்று நாட்களாக தொடர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

கடந்த திங்கட்கிழமை குஜராத் மாநிலத்துக்கு வந்த அவர் நன்பகல் வரை கட்ச் மற்றும் பரூச் மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். 

அதை தொடர்ந்து கடந்த செவ்வாய், அன்றும்  பிரதமர் மோடி வல்சாத் தர்மபுரயம் என்ற இடத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். மேலும்,அவருடைய பயண திட்டம் சுமார் 30 பொதுகூட்டங்களில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து தற்போது, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர்கள் கூறுகையில்;- பிரதமர் நரேந்திர மோடி, சூரத் நகரில் திட்டமிடப்பட்ட ஒரு பேரணியில் வாக்காளர்களை வலுப்படுத்தும் பி.ஜே.பி யின் முயற்சியை முன்னெடுத்துச் செல்வார். என  பா.ஜ.க தலைவர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல மூத்த தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ்ஸின் உறுப்பினரான அய்யர் என்பவர் பிரதமர் மோடியை "மோசமான மனிதர்" என்று கூறியதற்கு  பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து மோடி இன்று கூறுகையில்;- காங்கிரஸ் தலைவர்கள் ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளாத மொழியில் பேசுகிறார்கள். சிறந்த நிறுவனங்களில் படித்து வந்த ஒரு காங்கிரஸ் தலைவர், ராஜதந்திரிகளாக பணியாற்றினார், அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்தார், மோடி 'நெக்' என்று கூறினார். 

இது அவர்களுக்கு அவமானம். இது ஒரு முகலாய மனநிலையைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.குஜராத் மக்கள் இத்தகைய மோசமான மொழிக்கு பொருத்தமான பதிலை அளிப்பார்கள் என்றார். 

மேலும், அவர் நான் முதல்வர் மற்றும் பிரதமராக இருந்தேன். நான் வெட்கக்கேடான காரியத்தை செய்திருக்கிறேனா? பிறகு ஏன் அவர்கள் என்னை நெசெக் என்று அழைக்கிறார்கள்? பிரதமர் மோடி ஆவேசம் கொண்டார்.

அவர்கள் என்னை 'நெகே' என்று அழைக்கலாம் - ஆம், சமூகத்தின் ஏழைப் பிரிவில் இருந்து நான் ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு வேலை செய்ய என் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் செலவிடுகிறேன். அவர்கள் தங்கள் மொழியைக் காத்துக் கொள்ளலாம், நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம். என்றும் சுட்டி காட்டினார்.

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by clicking this link

Close