அரசு விடுத்த தெளிவான எச்சரிக்கை, கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்தது ட்விட்டர்

போலி செய்திகளை பரப்பியது தொடர்பாக, குறிப்பிட்ட 1178 டுவிட்டர் கணக்குகளின் பட்டியலை டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுப்பியது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 12, 2021, 04:05 PM IST
  • போலி செய்திகளை பரப்பியது தொடர்பாக, குறிப்பிட்ட 1178 டுவிட்டர் கணக்குகளின் பட்டியலை டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுப்பியது.
  • இது குறித்து, ட்விட்டர் உடனடியாக நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், அரசு தெளிவான எச்சரிக்கை ஒன்றை விடுத்தது.
  • போலி செய்திகளையும் வன்முறையையும் பரப்புவதற்கு சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், சமூகத்தை நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு விடுத்த தெளிவான எச்சரிக்கை, கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுத்தது ட்விட்டர் title=

விவசாயிகள் போராட்டம் வன்முறை போராட்டமாக மாறி, நாட்டிற்கே அவமானத்தை தேடித் தரும் வகையில், குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில், செங்கோட்டையில்,  காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது.

இந்நிலையில் விவாசாயிகள் போராட்டத்தை தூண்டி விடும் வகையிலான பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுடன் தொடர்புள்ள 1178  டுவிட்டர் கணக்குகளை முடக்குமாறு டுவிட்டர் நிறுவனத்திடம் அரசு கூறியுள்ளது. விவசாயிகள் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்பி, அதன் மூலம் விவாசாயிகள் போராட்டத்தை (Farmers Protest), இந்த கணக்குகள் வேலை செய்வதாக மத்திய அரசு குற்றம் சாட்டியது. 

போலி செய்திகளை பரப்பியது தொடர்பாக, குறிப்பிட்ட 1178 டுவிட்டர் கணக்குகளின் பட்டியலை டுவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுப்பியது.

இது குறித்து, ட்விட்டர் உடனடியாக நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், அரசு தெளிவான் எச்சரிக்கை ஒன்றை விடுத்தது.

இந்திய சட்டங்களை மதிப்பவற்கே, இந்தியாவில் இடம்  என அரசு டிவிட்டர் (Twitter)  மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தெளிவான செய்தியை கொடுத்துள்ள நிலையில், ட்விட்டட்ர் நிறுவனம் முன்னதாக பாதி கணக்குகளை முட்ட்டகிய நிலையில், தற்போது  மத்திய அரசு கொடுத்துள்ள பட்டியலில் உள்ள 97% சதவிகித ட்விட்டர் கணக்குகளை முடக்கியுள்ளது.

சமூக ஊடகங்கள் மூலம் போலி செய்திகள் (Fake News)  பரப்பப்பட்டால், வன்முறைகளை தூண்ட முயற்சி மேற்கொண்டால், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு வியாழக்கிழமை மாநிலங்களவையில் திட்டவட்டமாகக் கூறியது.

"பேச்சு சுதந்திரம் நிச்சயம் உண்டு, ஆனால் இது நியாயமான கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என 19 ஏ பிரிவு கூறுகிறதுய் " என்று தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

"நாங்கள் சமூக ஊடகங்களை (Social Media) மிகவும் மதிக்கிறோம், அது பொது மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் சமூக ஊடகங்களுக்கு பெரும் பங்கு உண்டு. இருப்பினும், போலி செய்திகளையும் வன்முறையையும் பரப்புவதற்கு சமூக ஊடகங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், சமூகத்தை  நடவடிக்கை எடுக்கப்படும் "என்று பிரசாத் கூறினார்.

ALSO READ | இந்தியா சட்டங்களை மதித்தால் தான் இந்தியாவில் இடம்: Twitter, FB-க்கு எச்சரிக்கை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News