பீமா கோரேகாவ் மோதல்: மும்பைக்கு பரவிய வன்முறை!!

மகாராஷ்டிரா புனே மாவட்டம் கோரேகாவ் பீமா பகுதியில் ஏற்பட்ட கலவரம் மும்பை வரை பரவியது. வன்முறை ஏற்பட்டுள்ளதால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Last Updated : Jan 2, 2018, 07:37 PM IST
பீமா கோரேகாவ் மோதல்: மும்பைக்கு பரவிய வன்முறை!! title=

கிட்டத்தட்ட 200 வருடங்களுக்கு முன்பு, அதாவது 1818-ம் ஆண்டு நடந்த போரின் நினைவாக கோரேகாவ் பீமா பகுதியில் தலித் மக்கள் ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அப்போது, அங்கு வந்த மற்றொரு தரப்பினருக்கும் தலித் சமூகத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இது பயங்கர மோதலாக ஏற்பட்டது. இந்த மோதலின் போது ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார். மேலும் பலர் காயம் அடைந்தார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போலீஸ் வாகனம் உட்பட ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்த கலவரம் பல பகுதிகளுக்கு பரவியது. இதனால் சில இடங்களில் ரயில் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் போராட்டம் காரணமாக பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

இதையடுத்து போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் தடியடி நடத்தி கலவரக்காரர்களை கலைத்து நிலைமைய கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

 

 

இந்நிலையில், இந்த கலவரம் மகாராஷ்டிரா தலைநகரம் மும்பைக்கும் பரவியது. பேரணியாக நடைபெற்ற போராட்டம், பிறகு கலவரமாக மாறியது. கல்வீச்சு தாக்குதலும் நடைபெற்றது. ஒரு சில இடங்களில் ரயில் சேவையும், நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சேவையும் முடங்கியது. சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டதால் போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்த தலித் சமூக மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இச்சம்பவத்தால் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மகாராஷ்டிரா மாநில அரசு அறிவித்துள்ளது.

 

 

Trending News