சித்தராமையாவுக்கு வாழ்த்துகள்... நான் சிறுபிள்ளை இல்லை - டிகே சிவகுமார் கொடுத்த ட்விஸ்ட்!

Siddaramaiah vs DK Shivakumar: தான் யாரையும் பிளாக் மெயில் செய்ய மாட்டேன் என்றும் தனக்கு என்று சுய அறிவு உள்ளதாகவும், கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டிகே சிவகுமார் தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : May 15, 2023, 08:32 PM IST
  • சித்தராமையா, டிகே சிவகுமார் ஆகியோர் டெல்லிக்கு காங்கிரஸ் தலைமை அழைத்ததாக தகவல்.
  • டிகே சிவகுமார் டெல்லி செல்வில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சித்தராமையா ஏற்கெனவே டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
சித்தராமையாவுக்கு வாழ்த்துகள்... நான் சிறுபிள்ளை இல்லை - டிகே சிவகுமார் கொடுத்த ட்விஸ்ட்! title=

Siddaramaiah vs DK Shivakumar: கர்நாடாகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றிய நிலையில், முதல்வர் பதவிக்கான இரண்டு போட்டியாளர்களாக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவும், கர்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவர் டிகே சிவகுமாரும் உள்ளனர்.

அந்த வகையில், முதலமைச்சர் தேர்வு செய்யும் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை, டெல்லி தலைமையிடம் ஒப்படைப்பதாக அந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

யாருக்கு எந்த பதவி?

தொடர்ந்து, சித்தராமையா டெல்லி பயணம் சென்றுள்ள நிலையில், டிகே சிவகுமார் டெல்லி பயணத்தை ரத்து செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முதலமைச்சர் பதவி சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் பதவி டிகே சிவகுமாருக்கும் வழங்க காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

மேலும் படிக்க | காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுக்கு ₹62000 கோடி தேவை!

இந்நிலையில், டிகே சிவகுமார் சக போட்டியாளராக கூறப்படும் சித்தராமையாவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார், இதன்மூலம், கர்நாடக அரசியலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. 61 வயதான அவர், கட்சியின் மத்திய தலைமையின் அழைப்பிற்குப் பிறகு இன்று மாலை டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக அவர் டெல்லி செல்லவில்லை என செய்தி நிறுவனம் ஒன்றிடம் அளித்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். 

நான் பிளாக்மெயில் செய்ய மாட்டேன்...

"கர்நாடகாவை நீங்கள் கைப்பற்றுவீர்கள் என்று உங்கள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது என்று சோனியா காந்தி என்னிடம் கூறினார். நான் இங்கே அமர்ந்து எனது வழக்கமான பொறுப்பை செய்கிறேன். உங்களுக்கு அடிப்படை மரியாதை, கொஞ்சம் நன்றியுணர்வு இருக்க வேண்டும். இந்த வெற்றியின் பின் யார் இருந்தார் என்பதை ஒப்புக்கொள்ளும் மரியாதை அவர்களுக்கு இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

நான் பிளாக்மெயில் செய்ய மாட்டேன், நான் அப்படிப்பட்டவன் கிடையது. எதையும் யூகிக்க வேண்டாம். எனக்கு என சுய அறிவு இருக்கிறது. நான் குழந்தை இல்லை. நான் யாருடைய வலையிலும் விழமாட்டேன், அதே நான் செய்யவும் மாட்டேன்" என்றார். அந்த செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அவர் தனது டெல்லி பயணத்தை ரத்து செய்ததற்கான காரணத்தை விளக்கவில்லை என்றாலும், அவருக்கு வயிற்று தொற்று இருப்பதாக குறிப்பிட்டார்.

மேலும் படிக்க | நீயா-நானா சண்டை போதும் சிவகுமார் மற்றும் சித்தராமையா! கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்?

135 எம்எல்ஏக்கள் எனது பலம்

ஏற்கனவே டெல்லியில் இருக்கும் சித்தராமையா இன்று மாலை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் பிற தலைவர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டது. கட்சி எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் உள்ள மனநிலையை உணர்ந்து காங்கிரஸால் நிறுத்தப்பட்ட மத்திய பார்வையாளர்கள் தங்கள் அறிக்கையை சமர்ப்பித்ததை அடுத்து இரு தலைவர்களையும் மத்திய தலைவர்கள் டெல்லிக்கு அழைத்தனர்.

இன்று முன்னதாக, சிவக்குமார் தன்னிடம் சட்டமன்ற கட்சி கூட்டத்தில் தங்கள் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறினார். "நேற்று 135 எம்எல்ஏக்கள் தங்கள் கருத்தை தெரிவித்து ஒரு வரியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர், சிலர் தங்கள் தனிப்பட்ட கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 135 எம்எல்ஏக்கள் தான் எனது பலம். எனது தலைமையில் காங்கிரஸ் 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது" என்று சிவகுமார் கூறினார்.

சுமார் 20 எம்எல்ஏக்கள் வெளியேறி பாஜகவில் இணைந்ததால், எச்.டி.குமாரசாமியுடனான கூட்டணி ஆட்சி கவிழ்ந்த பிறகு, கட்சியை மீண்டும் கட்டியெழுப்பிய பெருமையையும் அவர் பெற்றார். "தைரியத்துடன் ஒரு தனி மனிதனாக போராடி மாநிலத்தில் பெரும்பான்மையை உருவாக்கி நான் அதை நிரூபித்துவிட்டேன். கடந்த ஐந்து ஆண்டுகளில் என்ன நடந்தது என்பதை நான் பொதுவெளியில் வெளியிட விரும்பவில்லை" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். 

"எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியபோது, நான் மனம் தளராமல், தைரியமாக பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, சோனியா காந்தி ராகுல் காந்தி எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். விஷயத்தை அவர்களிடமே விட்டு விடுவோம்," என்றார். 

மேலும் படிக்க | கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு முக்கியமானவர் இவர் தான்... அடுத்த அசைன்மென்ட் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News