அமித் ஷா பயணத்தை தொடர்ந்து சூடு பிடிக்கும் ஹைதராத் தேர்தல் களம்..!!!

கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (GHMC) தேர்தலுக்கான பாஜக பிரச்சாரத்தில் பங்கேற்பதற்கு முன்பு வரலாற்று சிறப்பு மிக்க சார்மினாரை ஒட்டியுள்ள பாக்யலட்சுமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை செய்தார். டிசம்பர் 1 ம் தேதி நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் ஞாயிற்றுக் கிழமை மாலை முடிவடைகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 29, 2020, 04:03 PM IST
  • ஹைதராபாத் நகராட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் அமித் ஷா ஹைதராபாத்தை அடைந்தவுடன் அமித் ஷாவின் பிரமாண்டமான ரோட்ஷோ நடந்தது.
  • பாஜக தலைவர் தனது சுற்றுப்பயணத்தின் போது ஒரு ரோடு ஷோ நடத்தி கூட்டங்களில் உரையாற்றுவார்.
  • அமித் ஷாவின் வருகையின் போது நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சியின் ஆதரவாளர்களும் கூடினார்கள்.
அமித் ஷா பயணத்தை தொடர்ந்து சூடு பிடிக்கும் ஹைதராத் தேர்தல் களம்..!!! title=

ஹைதராபாத்: கிரேட்டர் ஹைதராபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் (GHMC) தேர்தலுக்கான பாஜக பிரச்சாரத்தில் பங்கேற்பதற்கு முன்பு வரலாற்று சிறப்பு மிக்க சார்மினாரை ஒட்டியுள்ள பாக்யலட்சுமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனை செய்தார். டிசம்பர் 1 ம் தேதி நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரம் ஞாயிற்றுக் கிழமை மாலை முடிவடைகிறது.

ஹைதராபாத் (Hyderabad) பாக்கியலட்சுமி கோயிலில் சுமார் 15 நிமிடங்கள் கழித்தபின், சார்மினார் அருகே கூடியிருந்த ஏராளமான தொண்டர்களின் உறசாகத்தை கூட்டடும் வகையில் அமித் ஷா அசைத்தார்

பாஜக (BJP) தலைவர் தனது சுற்றுப்பயணத்தின் போது ஒரு ரோடு ஷோ நடத்தி கூட்டங்களில் உரையாற்றுவார். வரலாற்று சிறப்புமிக்க நினைவுச்சின்னத்திற்கு அருகிலேயே காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். மத்திய துணை ராணுவப் படையினர் உட்பட ஏராளமான போலீஸ்காரர்கள் பணியில் அமர்த்தப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.

அமித் ஷாவின் வருகையின் போது நடிகர் பவன் கல்யாண் தலைமையிலான ஜனசேனா கட்சியின் ஆதரவாளர்களும் கூடினார்கள். 

அமித் ஷாவுடன் மத்திய உள்துறை இணை அமைச்சர்  கிஷன் ரெட்டி, மாநில பாஜக தலைவர் பூண்டி சஞ்சய் குமார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். பாஜக பொதுச் செயலாளர் பூபேந்திர யாதவ், கட்சியின் ஓபிசி முன்னணி தலைவர் கே.கே. லக்ஷ்மன், கட்சி எம்.பி., மாநில சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நகரின் பேகம்பேட்டை விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஷாவை பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் வரவேற்றனர். மத்திய அமைச்சரின் கோயில் பயணம் முக்கியமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் இந்துத்துவத்தை மையமாகக் கொண்டு பாஜக இத்தேர்தலில் போட்டியிடுகிறது.

ALSO READ |  கனடாவிலிருந்து வரும் அன்னபூரணியால் இந்தியர்கள் மகிழ்ச்சி: பிரதமர் மோடி

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News