கேபினட் அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கப்பட்டது சரி; ஆனால் பிரதமர் மோதிக்கு எந்த துறை?

இப்படி அனைவருக்கும் அமைச்சரவையில் இடம் அளித்த பிரதமர் மோடி, தனக்கு எந்த துறைகளை எடுத்துக்கொண்டு உள்ளார் என்று பார்ப்போம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 31, 2019, 02:07 PM IST
கேபினட் அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கப்பட்டது சரி; ஆனால் பிரதமர் மோதிக்கு எந்த துறை? title=

புது டெல்லி: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா நேற்று குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோரும், பிம்ஸ்டெக் நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட சுமார் 8 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

முதலில் பிரதமராக நரேந்திர மோடி உறுதி எடுத்துக் கொண்டார். இதையடுத்து நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் 25 அமைச்சர்கள் மற்றும் 24 இணையமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 9 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், இன்று மத்திய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டது. கடந்த மோதி அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமனுக்கு, இந்த முறை நிதித்துறை ஒதுக்கப்பட்டு உள்ளது. உள்துறை அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.  பாஜக தலைவராக இருந்த அமித்ஷா உள்துறை அமைச்சராக நியமனம். சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் மீண்டும் நிதின் கட்கரி நியமனம். சட்டத்துறை அமைச்சராக ரவி சங்கர் பிரசாத் நியமனம். 

இப்படி அனைவருக்கும் அமைச்சரவையில் இடம் அளித்த பிரதமர் மோடி, தனக்கு எந்த துறைகளை எடுத்துக்கொண்டு உள்ளார் என்று பார்போம். பிரதமர் மோடி அணுசக்தி, விண்வெளி மற்றும் ஓய்வூதியம் ஆகிய துறைகளை தன் வசம் வைத்துள்ளார் குறிப்பிடத்தக்கது.

Trending News