சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கே உள்ளது என சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்குவதை எதிர்த்து பிரசாந்த் பூஷண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த நீதிபதிகள் சிக்ரி மற்றும் அசோக் பூஷண், நீதிபதிகளுக்கு எல்லாம் தலைமை நீதிபதி தான் தலைவர் என்பதில் எந்த பிரச்னையுமில்லை. அவருக்கு, வெவ்வெறு அமர்வுகளுக்கு வழக்குகளை ஒதுக்க அதிகாரம் உள்ளது. நீதிபதிகளில், அவர் முதலிடத்தில் உள்ளதால், வழக்குகளை ஒதுக்கும் முக்கிய கடமை அவருக்கு உள்ளது. தலைமை நீதிபதி, நீதிபதிகளில், மூத்த நீதிபதியாக உள்ளதால், கோர்ட் நிர்வாகத்தில் தலைவராக செயல்பட அதிகாரம் உள்ளது. இதில் வழக்குகளை ஒதுக்குவதும் அடக்கம்.
எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.