பா.ஜ தேர்தல் அறிக்கையில் அகங்காரம் ஈகோ நிறைந்துள்ளது: ராகுல் காந்தி விமர்சனம்

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை ஒரு தனிநபரின் குரல் என்றும், ஒரு மூடிய அறையில் உட்கார்ந்து தயாரிக்கப் பட்டது எனவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 9, 2019, 01:19 PM IST
பா.ஜ தேர்தல் அறிக்கையில் அகங்காரம் ஈகோ நிறைந்துள்ளது: ராகுல் காந்தி விமர்சனம் title=

சங்கல்ப பத்ரா என்ற பெயரில் பாஜக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. அதை பிரதமர் மோடி, அமித்ஷா வெளியிட்டனர். பாஜக தேர்தல் அறிக்கையில் சுமார் 75 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அதில் குறிப்பாக ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும், அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படும்.  அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்தும் முயற்சியில் பள்ளிகள் அளவில் கற்பித்தல் அதிகரிக்கப்படும். மத நம்பிக்கைகளை பாதுகாக்க அரசியல் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும். நவீன கால சூழல்களை கருத்தில் கொண்டு பொது சிவில் சட்டம் கொண்டுவரப்படும் போன்ற முக்கிய அறிவிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது, 

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை ஒரு தனிநபரின் குரல் என்றும், ஒரு மூடிய அறையில் உட்கார்ந்து தயாரிக்கப் பட்டதாகவும், அவர்களின் தேர்தல் அறிக்கையில்  தொலைநோக்கு பார்வை இல்லை. குறுகிய நோக்கம் கொண்டதாகவும், அகங்காரம் கொண்டதாகவும் உள்ளது. பா.ஜ.க-வின் தேர்தல் அறிக்கை ஒரு ஏமாற்று அறிக்கை ஆகும் என்று ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஆனால் காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை, அனைவரிடம் கருத்து கேட்டப் பின்னர் தான் தயாரிக்கப்பட்டது. அதில் 1 மில்லியன் இந்திய குடிமக்களின் குரல் அடங்கும். காங்கிரசின் தேர்தல் அறிக்கை பொது மக்களின் குரலைக் கொண்டுள்ளது. எங்கள் தேர்தல் அறிக்கை ஒரு ஸ்மார்ட் மற்றும் பயனுள்ள ஆவணமாகும் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.

இந்தியா முழுவதும் வரும் ஏப்ரல் 11 முதல் மே 18 வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அனைத்து கட்சி தலைவர்களும் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News