எதிர்காலத்தை பாதுகாக்க காங்கிரஸ் உடன் இணையுங்கள் - மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு

இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க காங்கிரஸூடன் உறுதியேற்க வருமாறு காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார்

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 26, 2024, 12:55 PM IST
  • ஜனநாயகம், நீதிக்கு அச்சுறுத்தல்
  • அனைவரும் ஒன்றிணைய வேண்டும்
  • மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்
எதிர்காலத்தை பாதுகாக்க காங்கிரஸ் உடன் இணையுங்கள் - மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு title=

இந்தியாவின் 75வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லியில் முப்படைகளின் கம்பீரமான அணி வகுப்பு நடைபெறும் அதே வேளையில், காங்கிரஸ் கட்சி நாட்டு மக்களுக்கு முக்கியமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருக்கிறது. இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க தங்களுடன் இணைந்து உறுதியேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. நாட்டு மக்களுக்கு குடியரசு தின விழா வாழ்த்து செய்தியை வெளியிட்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஜனநாயக மதிப்புகளை காப்பாற்ற வேண்டிய தேவை இந்த ஆண்டில் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களில் நீதியை நிலைநாட்ட காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Republic day Updates: தேசிய கொடி ஏற்றினார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு

இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோவில், அனைவருக்கும் அனைவருக்கும் 75வது குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு பண்டைய இந்திய நாகரிகத்தில் உள்ளார்ந்த சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டது என தெரிவித்திருக்கும் மல்லிகார்ஜூன கார்கே, நமது நீதி, கண்ணியம், சமத்துவம் மற்றும் சமத்துவம் ஆகியவை அதன் வலுவான தூண்களாகும் என கூறியுள்ளார்,

மேலும் இவை சுதந்திரத்திற்குப் பிறகு நமது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தின் தரங்களாகவும் மாறியிருக்கிறது என்றும், நமது அரசியலமைப்பு அனைத்து குடிமக்களுக்கும் அடிப்படை உரிமைகள், சமூக நீதி மற்றும் அரசியல் உரிமைகளை சமமாக வழங்கியுள்ளது என்றும் கூறியுள்ளார். ஆனால், இன்று இந்த உரிமைகள் அரசாலேயே தாக்கப்படுகின்றன என குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, 2024ம் ஆண்டு இந்தியாவிற்கு மிக முக்கியமான ஆண்டாகும் என அடிக்கோடிட்டு தெரிவித்துள்ளார். 

அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் நீதியின் மதிப்புகளை நம்மால் காப்பாற்ற முடியுமா அல்லது ஒவ்வொரு நபரும் சமமாக இல்லாத அதே சகாப்தத்தை மீண்டும் அடைவோமா என்பதை இந்த ஆண்டு தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளார். இந்த விழுமியங்களைக் காப்பாற்றவும், சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியை மீண்டும் நிலைநாட்டவும் காங்கிரஸ் கட்சி தீர்மானித்துள்ளது என கூறியிருக்கும் அவர், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் அதிகாரமளித்து அனைவரின் உரிமைகளையும் பாதுகாக்கும் என தெரிவித்துள்ளார். 

இந்த குடியரசு தினத்தில் இந்த நீதிக்கான பணியில் இணைவதாக உறுதிமொழி ஏற்போம், அப்போதுதான் நமது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்க முடியும் என்றும் மல்லிகார்ஜூன கார்கே தன்னுடைய எக்ஸ் பதிவில் கூறியுள்ளார். இறுதியாக, அரசியல் சாசனம் வெல்லும் - இதில் இந்தியா வெல்லும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க  |Padma Awards: 2024ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் அறிவிப்பு! நடிகர் விஜயகாந்த்துக்கு ‘பத்ம பூஷன்’ விருது

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News