பீதியை கிளப்பும் Omicron BA.4, BA.5; உங்களை காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை

ஒமிக்ரான் துணை மாறுபாடு BA.4 மற்றும் BA.5 தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தொற்று பரவல் மிக வேகமாக பரவத் தொடங்கி விடும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 31, 2022, 09:09 AM IST
  • Omicron BA.4 மற்றும் BA.5 ஆகியவை இந்தியாவில் பதிவாகியுள்ளன.
  • இதுவரை தொற்று பாதிப்புகள் மகாராஷ்டிராவில் மட்டுமே பதிவாகியுள்ளன.
  • மற்ற மாநிலங்களிலும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் அச்சம்.
பீதியை கிளப்பும் Omicron BA.4, BA.5; உங்களை காத்துக் கொள்ள செய்ய வேண்டியவை title=

ஒமிக்ரான் துணை மாறுபாடு BA.4 மற்றும் BA.5: இந்தியா உட்பட உலகில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில்,  Omicron துணை மாறுபாடான BA.4 மற்றும் BA.5 தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ள கவலை ஏற்படுத்தியுள்ளது. 

Omicron மாறுபாட்டின் துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவை இந்தியாவில் பதிவாகியுள்ளன. இருப்பினும் இதுவரை தொற்று பாதிப்புகள் மகாராஷ்டிராவில் மட்டுமே பதிவாகியுள்ளன என்பது நிம்மதியான விஷயம். ஆனால், தொற்றுநோயைத் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், மற்ற மாநிலங்களிலும் அதன் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Omicron மாறுபாட்டின்  துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 எவ்வளவு ஆபத்தானது?

கொரோனா வைரஸின் துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவை சில நாடுகளில் கவலைகளை எழுப்பியுள்ளன. ஆனால் இந்தியாவில் ஆபத்து குறைவாக உள்ளது. ஏனெனில் Omicron க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி ஏற்கனவே நாட்டு மக்களிடையே வலுவாக உள்ளது.

இருப்பினும், இந்த மாறுபாடுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதால், இது தொடர்பான கண்காணிப்பு  நடவடிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | COVID-19: புனேயில் BA.4, BA.5 வகை ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி

ஒமிக்ரானின் BA.4 மற்றும் BA.5 தொற்று பாதிப்பு அறிகுறிகள் கொண்ட நோயாளிகளைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  ஏனெனில் பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 அறிகுறிகள் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக காணப்படுகின்றன.

காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் வயிற்று வலி, தொண்டை புண், இருமல் போன்ற பொதுவான அறிகுறிகள் Omicron துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவற்றால் பாதிக்கப்படும் போது ஏற்படலாம்.

BA.4 மற்றும் BA.5 குறித்து WHO கூறுவது என்ன?

உலக சுகாதார நிறுவனம் (WHO) ஓமிக்ரானின் துணை வகைகளான BA.4 மற்றும் BA.5 ஆகியவை தீவிர தொற்று ஏற்படுத்தும் வகை அல்ல என தெரிவித்துள்ளது. இந்த இரண்டு துணை வகைகளின் அறிகுறிகள் மிகவும் கடுமையானவை அல்ல என்றும் அவை முந்தைய மாறுபாடுகளைப் போல  தீவிர தொற்றுநோயாகவும் இல்லை என்று WHO கூறுகிறது.

இருப்பினும், இதனுடன், பல்வேறு நாடுகளில், குறிப்பாக தொற்று பரவல் உள்ள நாடுகளிம் சோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க | 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய குரங்கம்மை...எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News