கோவிட் அடுத்த அலை ரெடி! பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கோங்க! எச்சரிக்கும் WHO

XBB variant: கோவிட்-19 வைரஸின் மாறுபாடான Omicron இன் XBB துணை வகை, சில நாடுகளில் புதிய கோவிட் அலையை ஏற்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Nov 4, 2022, 10:58 AM IST
  • கோவிட் பூஸ்டர் தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம்
  • அடுத்த கோவிட் அலை இந்தியாவில் வரலாம்
  • இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு
கோவிட் அடுத்த அலை ரெடி! பூஸ்டர் தடுப்பூசியை போட்டுக்கோங்க! எச்சரிக்கும் WHO title=

புதுடெல்லி: கோவிட் பூஸ்டர் தடுப்பூசியை தவிர்க்க வேண்டாம் என்றும், அடுத்த கோவிட் அலை இந்தியாவில் வரலாம் என்றும் இந்தியாவுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியர்கள் பூஸ்டர் டோஸ்களை கைவிடுவதால், 'XBB வகை கொரோனா வைரஸ்’ மீண்டும் கோவிட்-19 அலையை ஏற்படுத்தலாம் என்றும் WHO எச்சரிக்கை விடுத்து இருக்கிறது."ஒமிக்ரான் வகை வைரசின் 300-க்கும் மேற்பட்ட துணை வகைகள் உள்ளன. தற்சமயம் XBB வகை வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தலாம்” என்று நான் நினைக்கிறேன், இது ஒரு மறுசீரமைப்பு வைரஸ் ஆகும். சில மறுசீரமைப்பு வைரஸ்களை முன்பே பார்த்தோம். இவை, நோயெதிர்ப்பு சக்தியை தவிக்கும் திறன் படைத்தவை. அதாவது ஆன்டிபாடிகளையும் தாண்டி, பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை. XBB காரணமாக சில நாடுகளில் தொற்றுநோய்களின் மற்றொரு அலைவரலாம்" என்று WHO கூறியது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் வியாழக்கிழமையன்று புனேயில் இந்த தகவலை பகிர்ந்துக் கொண்டார். கோவிட்-19 வைரஸின் மாறுபாடான Omicron இன் XBB துணை வகை, சில நாடுகளில் "மற்றொரு தொற்றுநோய் அலை" ஏற்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதாக அவர் தெரிவித்தார். 

மேலும் படிக்க | கொரோனா தடுப்பூசி வாங்குவதை நிறுத்தியது இந்திய அரசு 

வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் நெட்வொர்க்கின் (DCVMN) வருடாந்திர பொதுக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சௌமியா சுவாமிநாதன், இந்த புதிய மாறுபாடுகள் மருத்துவ ரீதியாக மிகவும் கடுமையானவை என்று எந்த நாட்டிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

BA.5 மற்றும் BA.1 ஆகியவற்றின் வழித்தோன்றல்களையும் கண்காணித்து வருவதாக டாக்டர் சௌமியா சுவாமிநாதன் கூறினார். வைரஸ் உருவாகும்போது, ​​​​அது மேலும் மேலும் பரவக்கூடியதாக உருவாகப் போகிறது, என்று அவர் கூறினார்.

"தற்போதைக்கு, வைரசின் புதிய துணை வகைகள் மருத்துவ ரீதியாக மிகவும் தீவிரமானவை என்று பரிந்துரைக்க முடியாது. அதற்கான தரவுகள் எதுவும் நமக்கு எந்தவொரு நாட்டிலிருந்தும் கிடைக்கவில்லை," என்று அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க | தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படும்! இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா?

எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை பரிந்துரைத்த டாக்டர் சுவாமிநாதன், கண்காணிப்பு மற்றும் பின்தொடர்தல், இதற்கு முக்கிய படிகள் என்று அறிவுறுத்தினார். "இந்தியாவில் கொரோனா வழக்குக்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நாடு முழுவதும் கொரோனா பரிசோதனை செய்யும் அளவு குறைந்துள்ளது, மரபணு கண்காணிப்பும் கடந்த சில மாதங்களில் குறைந்துள்ளது. மரபணு கண்காணிப்பின் மூலோபாய மாதிரியையாவது நாம் பராமரிக்க வேண்டும். மாறுபாடுகளைக் கண்காணித்துக்கொண்டே இருப்பது அவசியம்" என்று அவர் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல், COVID-19 தொடர்ந்து சர்வதேச பொது சுகாதார அவசரநிலையாக உள்ளது என்று கூறியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக, உலகளவில் வாரம்தோறும் 8,000 முதல் 9,000 இறப்புகள் பதிவாகி வருவதாக அவர் மேலும் கூறினார்.

"எனவே தொற்றுநோய் முடிந்துவிட்டது என்று நாங்கள் கூறவில்லை, அதாவது அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. கொரோனாவை தவிர்க்க இப்போது நம்மிடம் பல கருவிகள் உள்ளன. அதில் மிக முக்கியமான விஷயம் தடுப்பூசிகள்" என்று டாக்டர் சுவாமிநாதன் கூறினார்.

மேலும் படிக்க | கோவிட் மற்றும் இன்ஃப்ளூயன்சா என இரு நோய்களுக்கான ஒற்றைத் தடுப்பூசி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News