முன்ஜாமீன் மனு தள்ளுபடி; கைது செய்யப்படுவாரா கார்த்தி சிதம்பரம்?

Karthi chidambaram: விசா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

Written by - Chithira Rekha | Last Updated : Jun 3, 2022, 08:07 PM IST
  • கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
  • டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
  • விசா முறைகேடு வழக்கில் கைதாவாரா கார்த்தி சிதம்பரம்?
முன்ஜாமீன் மனு தள்ளுபடி; கைது செய்யப்படுவாரா கார்த்தி சிதம்பரம்? title=

கடந்த 2011-ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது மகன் கார்த்தி சிதம்பரம்  263 சீனர்களுக்கு விதிகளை மீறி விசா பெற்றுத்தந்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. பஞ்சாபில் TSPL எனும் நிறுவனம் அமைத்து வரும் அனல் மின்நிலையம் அமைப்பதற்கான பணிகள் சீன நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதற்கான பணிகளில் ஈடுபடுவதற்காக 263 சீனர்களுக்கு விதிகளை  மீறி விசா பெற்றுத் தர, TSPL நிறுவனம் கார்த்தி சிதம்பரத்திற்கும், அவரது ஆடிட்டர் பாஸ்கர ராமன் என்பவருக்கும் லஞ்சம் கொடுத்ததாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்டுமானப் பணிகள் தாமதமானதால் சீனப்பணியாளர்களின் விசாவை நீட்டிக்க TSPL நிறுவனம் மீண்டும் பாஸ்கர ராமனை அணுகியதாகவும் சிபிசி கூறியுள்ளது.

மேலும் படிக்க | டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் திடீர் கைது

இது தொடர்பாக பாஸ்கர ராமனிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர் கடந்த 18-ம் தேதி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இது தொடர்பாக கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது. இதனிடையே கார்த்தி சிதம்பரம் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கார்த்தி சிதம்பரத்தை கடந்த 30-ம் தேதி வரை கைது செய்யத் தடை விதித்தது.

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுக ஏதுவாக தன்னை கைது செய்ய விதிக்கப்பட்டத் தடையை மேலும் 4 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டுமென கார்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தின் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனால், கார்த்தி சிதம்பரம்  கைது செய்யப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க | இறுகும் பிடி... கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News