பாம்புகளை கொடூரமாகக் கையாள வேண்டாம் : வனசேவை அதிகாரி காட்டம்..!

பாம்புகளை கொடூரமாகக் கையாள வேண்டாம்  என கர்நாடக இளைஞரின் பாம்பு பிடி வீடியோவை பதிவிட்டு இந்திய வனச்சேவை அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.   

Written by - Dayana Rosilin | Last Updated : Mar 17, 2022, 08:20 PM IST
  • பாம்பு பிடி வீரரை கொத்திய நாகப்பாம்பு
  • கர்நாடக இளைஞரின் வைரல் வீடியோ
  • வனத்துறை அதிகாரி கண்டனம்
பாம்புகளை கொடூரமாகக் கையாள வேண்டாம் : வனசேவை அதிகாரி காட்டம்..!  title=

கர்நாடகா மாநிலம் சிர்சி பகுதியை சேர்ந்தவர் பாம்பு பிடி வீரர் மாஸ் சயீத். யூடியூப் சேனல் வைத்து நடத்தி வரும் இவர் பாம்புகளுடனான தனது வீடியோக்களை அதில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் அதற்கான ஒரு வீடியோவை 3 நாகபாம்புகளை வைத்து எடுக்க முயன்ற அவர், தனது கை அசைவிற்கு ஏற்ப பாம்புகளை ஆடச்செய்து அதை வீடியோவாக எடுத்துள்ளார்.

அப்போது, அவரின் இடது புறத்தில் இருந்த ஒரு நாக பாம்பு எதிர்பாராத விதமாக திடீரென அவரின் முழங்காலை தாவிப்பிடித்துள்ளது. இதனையடுத்து அவரின் உடம்பில் விஷம் பாய்ந்ததால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான வீடியோவை  தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்திய வன சேவை அதிகாரி சுசாந்தா நந்தா, பாம்பு பிடி வீரர் மாஸ் சயீதை கடுமையாக விமர்சித்துள்ளார்.

அதில் இந்த இளைஞர் நாக பாம்புகளை மிக கொடூரமாக கையாளுகிறார் எனவும் உயிருக்கு ஆபத்தான இந்த செயல் தேவையற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவரின் இந்த ட்விட்டர் பதிவும், பாம்பு பிடி வீரர் மாஸ் சயீதின் வீடியோ பதிவும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த பலரும் அவரை விமர்ச்சித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | முட்டையை எடுத்த நபர், அட்டாக் செய்த மயில்: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News