முட்டையை எடுத்த நபர், அட்டாக் செய்த மயில்: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ

Viral Video: மயிலின் திடீர் தாக்குதலால் அந்த நபர் பயந்து அங்கேயே விழுகிறார். இந்த காணொளியை பார்த்த சமூக வலைதளவாசிகள் பல வித ரியாக்‌ஷன்களை அளித்து வருகின்றனர். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 9, 2022, 02:56 PM IST
  • சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன.
  • சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
முட்டையை எடுத்த நபர், அட்டாக் செய்த மயில்: சிரிக்க வைக்கும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

விலங்குகளிடமும் பறவைகளிடமும் நாம் அன்பாக பழகினால், அவையும் நம்முடன் அன்பாக பழகும். ஆனால், அவற்றுடன் நாம் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றால், அவையும் நம்மை ஒரு கை பார்க்கத்தான் செய்யும். சமூக ஊடகங்களில் பல வீடியோக்களில் இதுபோன்ற காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். தற்போது இதுபோன்று மீண்டும் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. 

இந்த வீடியோவில், ஒரு ஆண் மயிலும் பெண் மயிலும் இருப்பதைக் காண முடிகின்றது. அப்போது அங்கு ஒரு நபர் வருகிறார். அவர் மயிலின் முட்டைகளை எடுக்க முயற்சிக்கிறார். 

பெண் மயிலின் அருகில் உள்ள முட்டைகளை அந்த நபர் எடுக்க முயற்சிக்கையில், ஆண் மயில் பறந்துவந்து அந்த நபரைத் தாக்குகிறது. மயிலின் திடீர் தாக்குதலால் அந்த நபர் ஆடிபோய் அங்கேயே விழுந்துவிடுகிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி உள்ளது .

மேலும் படிக்க | சேற்றுக் குளத்தில் குத்தாட்டம் போட்ட கோவில் யானை! வைரலாகும் வீடியோ! 

மனிதனை தாக்கிய மயில் 

வைரலான வீடியோவில், காட்டில் ஒரு பெண் மயில் தனது முட்டைகளை பாதுகாப்பாக பார்த்துக்கொண்டிருப்பதைக் காண முடிகிறது. அப்போது ஒரு நபர் அங்கு வந்து முட்டைகளை எடுக்க முயற்சிக்கிறார். ஆண் மயில் அந்த நபர் செய்வதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர் முட்டைகளை எடுத்த உடனேயே அது பறந்து வந்து அவரை தாக்குகிறது. மயிலின் திடீர் தாக்குதலால் அந்த நபர் பயந்து அங்கேயே விழுகிறார். இந்த காணொளியை பார்த்த சமூக வலைதளவாசிகள் பல வித ரியாக்‌ஷன்களை அளித்து வருகின்றனர். 

மயிலின் தாக்குதல் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by natural video (@naturepixm)

மயில் தாக்கும் வீடியோ வைரல்

 

இந்த வீடியோ naturalpixm என்ற அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவிற்கு கமெண்டு செய்த ஒருவர், 'எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது' என்று எழுதியுள்ளார். மற்றொரு நபர், 'வெல்டன் பர்ட்’ என்று கமெண்ட் செய்துள்ளார்.

இந்த வீடியோவுக்கு இதுவரை பல வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மயிலை ஏமாற்ற போய் தானே ஏமாந்து அடி வாங்கிய அந்த நபரை அனைவரும் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த வீடியோவுக்கு  பல வித கமெண்டுகள் வந்த வண்ணம் உள்ளன. 

மேலும் படிக்க | ஸ்பைடர்மேனாக மாறிய பூனை! வைரல் வீடியோ! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News