டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 7.2 ரிக்டர் நிலநடுக்கம்! சீனாவில் மையம் கொண்ட பூகம்பம்

Delhi-NCR Earthquake: டெல்லி-என்சிஆர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது, பூகம்பத்தின் மையம் சீனா...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 23, 2024, 07:35 AM IST
  • டெல்லி-என்சிஆர் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
  • 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுகம்
  • பூகம்பத்தின் மையம் சீனா...
டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 7.2 ரிக்டர் நிலநடுக்கம்! சீனாவில் மையம் கொண்ட பூகம்பம் title=

Earthquake:  திங்கள்கிழமை இரவு டெல்லி-என்சிஆர் பகுதியில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. சீனாவில் 7.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் வட மாநிலங்களிலும் வலுவாக உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் நேபாளம்-சீனா எல்லையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் 80 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிர்சேதம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் பகுதியில் திங்கள்கிழமை இரவு 7.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் அதிர்வு டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தின் (என்சிஆர்) சில பகுதிகளிலும் உணரப்பட்டது.

நிலநடுக்கத்தின் மையம் சீனா

நிலநடுக்கத்தின் மையம் சீனாவின் தெற்கு ஜின்ஜியாங் பகுதியில் 80 கிலோமீட்டர் ஆழத்தில் இருப்பதாக சமூக ஊடக தளமான 'எக்ஸ்' மூலம் தேசிய நில அதிர்வு மையம் (National Center for Seismology (NCS)) தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | புத்தாண்டின் முதல் நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கியது! சுனாமி வரும் என எச்சரிக்கை!

ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும் தெரிந்தது. முன்னதாக, ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் விளைவாக, ஜனவரி 11 வியாழக்கிழமை பிற்பகல் டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் உணரப்பட்டது. லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் கைபர் பக்துன்க்வா நகரங்களிலும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நிலநடுக்கங்களின் தாக்கமும் சக்தியும் குறைந்து இருப்பதால் சேதங்கள் ஏற்படவில்லை.  பிரேசில் நாட்டின் மேற்கு பகுதியிலும் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் பிரேசில் நாட்டிலும் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

அதேபோல இந்திய பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் (Southwest Indian Ridge) பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 6.4 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியப் பெருங்கடலில் பூகம்பம் உருவானபோதும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

மேலும் படிக்க | ஏலகிரியில் திடீரென ஹெலிகாப்டர் பறந்து வந்து தரையிறங்கியதால் பரபரப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News