ஏலகிரியில் திடீரென ஹெலிகாப்டர் பறந்து வந்து தரையிறங்கியதால் பரபரப்பு!

ஏலகிரியில் திடீரென ஹெலிகாப்டர் பறந்து வந்து தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் விசாரணையில் உண்மை வெளிவந்துள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jan 22, 2024, 08:35 PM IST
  • ஏலகிரியில் திடீரென தரையிரங்கிய ஹெலிகாப்டர்.
  • போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
  • நடந்தது என்ன?
ஏலகிரியில் திடீரென ஹெலிகாப்டர் பறந்து வந்து தரையிறங்கியதால் பரபரப்பு! title=

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட சுற்றுலாத்தலமான ஏலகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதையடுத்து, அங்கு ஒரு ஹெலிகாப்டர் திடீரென தரையிரங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏலகிரியில், இதுவரை பேருந்துகளையும் இலகுரக வாகனங்களையும் மட்டுமே பார்த்த அப்பகுதி மக்களுக்கு அத்தனாவூர் பகுதியில் இயங்கும் பிரபல டான்போஸ்கோ கல்லூரிக்கு சொந்த இடமான நிலத்தில்  திடீரென ஒரு ஹெலிகாப்டர் பறந்து வந்து இறங்கியதால் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் படிக்க | 'அயோத்திக்கு போகாமல்... நிர்மலா சீதாராமனின் நோக்கம் இதுதான்' - புட்டு புட்டு வைக்கும் சேகர் பாபு!

இதனால் அப்பகுதி மக்கள் ஹெலிகாப்டரை பார்க்க கூட்டம் கூட்டமாக வந்து சென்ற நிலையில் சம்பவம் குறித்து ஏலகிரி காவல்துறை விசாரணை மேற்கொண்டபோது பெங்களூர் பகுதியில் இருக்கும் பிரபல தொழிலதிபரின் இல்ல திருமணம் ஏலகிரியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தங்க கோட்டையில் நடைபெற்றதை தொடர்ந்து புதுமண தம்பதிகளை அழைத்து செல்வதற்காக ஹெலிகாப்டர் வந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. திடீரென வந்து தரையிறீங்க ஹெலிகாப்டரால் சுமார் 2 மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

மேலும் படிக்க | ஜவுளி கடையின் மேற்கூரையை உடைத்து 14 லட்சம் அபேஸ்! சினிமா பாணியில் கொள்ளை..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News