குடியரசுத் தலைவர் தேர்தல் எப்போது; இன்று மாலை 3 மணிக்கு முக்கிய அறிவிப்பு

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 9, 2022, 12:19 PM IST
  • தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
  • அடுத்த குடியரசுத்தலைவர் யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தல் எப்போது; இன்று மாலை 3 மணிக்கு முக்கிய அறிவிப்பு title=

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் யார் வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், குடியரசுத் தலைவருக்கான தேர்தல் தேதியை இன்று பிற்பகல் 3 மணிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாலை 3 மணிக்கு தேர்தல் தேதியை அறிவிக்க தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பு நடத்த உள்ளது.

தற்போதைய குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், அடுத்த குடியரசுத்தலைவர் யார் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆளும் பா.ஜ.க அரசு நிறுத்தும் வேட்பாளர் யாராக இருக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்பு அதிக உள்ளது.

மேலும் படிக்க | ரெப்போ விகிதத்தை 0.50% உயர்த்தியது RBI; EMI சுமை அதிகரிக்கும்

அதை போலவே, எதிர்க்கட்சிகளின் வேட்பாளர்கள் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும்  அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தற்போதைய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு உள்பட  நான்கைந்து பெயர்கள் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய செய்தி: நீங்கள் செலுத்தும் EMI அதிகரிக்கலாம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News