வரலாறு காணாத சரிவு: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 72.10

வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது இந்திய ரூபாயின் மதிப்பு

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 6, 2018, 03:17 PM IST
வரலாறு காணாத சரிவு: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 72.10 title=

உலக நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை உயர்வு மற்றும் சர்வதேச அளவில் ஏற்ப்பட்டுள்ள சில காரணிகளால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது. 

இந்தியா மட்டும் அல்ல, உலகின் பல நாடுகளில் கரன்சியின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் மறுபுறம் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து, இந்த சரிவு கடந்த மாதம் துவங்கி இன்று வரை தொடர்கிறது. 
இன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72 ரூபாய் 10 காசுகளாக உள்ளது. 

முன்னதாக, இன்று காலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி, இந்திய ரூபாயின் மதிப்பு சரிவுக்கு உள்நாட்டுப் பொருளாதரம் காரணம் அல்ல. அதுக்குரித்து யாரும் அச்சம் அடைய வேண்டாம் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News