வெளுத்து வாங்கும் மழை, இந்தியா கேட்டையும் பதம் பார்க்குமா? தரையில் ஓடும் யமுனை

Delhi Floods: டெல்லியில் பெய்யும் அடைமழையினால் இந்தியா கேட் வெள்ளத்தில் மூழ்கப் போகிறதா? யமுனை நீர்மட்டம் அபாய எச்சரிக்கை அளவைத் தாண்டி பாய்வதால் டெல்லியில் உயர் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 13, 2023, 03:47 PM IST
  • டெல்லியில் பெய்யும் அடைமழை
  • யமுனை நீர்மட்டம் அபாய எச்சரிக்கை அளவைத் தாண்டியது
  • டெல்லியில் உயர் எச்சரிக்கை நிலை விடுக்கப்பட்டுள்ளது
வெளுத்து வாங்கும் மழை, இந்தியா கேட்டையும் பதம் பார்க்குமா? தரையில் ஓடும் யமுனை title=

புதுடெல்லி: டெல்லியில் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், ஐடிஓ, செங்கோட்டை மற்றும் டெல்லி செயலகம் போன்ற பகுதிகள் ஏற்கனவே நீரில் மூழ்கியிருக்கின்றன. யமுனையில் 208.48 மீட்டர் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில், டெல்லியின் முக்கியமான இந்தியா கேட் வெள்ளத்தில் மூழ்கிவிடுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.  

இந்தியா கேட் யமுனை நதிக்கரையில் இருந்து மூன்று முதல் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, என்பதால் அந்தக் கவலை தற்போது எழவில்லை. ஆனால், வெள்ளம் சூழ்ந்த ரிங் ரோடு மற்றும் ஐபி ஃப்ளைஓவருக்கு இன்னும் அருகில் உள்ளது.

மறுபுறம், வடகிழக்கு டெல்லியின் காஷ்மீர் கேட், மஜ்னு கா தில்லா, மற்றும் சிவில் லைன்கள் போன்ற முக்கிய பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

டெல்லி செங்கோட்டைப் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காட்சி இது.

டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் பருவமழை பேயாட்டம் போட்டது. இமாச்சலப் பிரதேசம் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இதனால் கடந்த 3 நாட்களில் ஆற்றின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து, 45 ஆண்டுகளுக்கு முன்பு 207.49 மீட்டர் என்ற சாதனையை முறியடித்துள்ளது.

யமுனை நீர் மட்டம் உயர்ந்து வருவதால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது அமைச்சரவை மற்றும் பிற மூத்த அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ள டெல்லி செயலகம் வியாழக்கிழமை வெள்ளத்தில் மூழ்கியது. ராஜ்காட்டில் இருந்து டெல்லி செயலகம் வரையிலான சாலையும் நீரில் மூழ்கியது.

இந்தியா கேட் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அரசு உயர்மட்ட அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து இடையூறுகள் அதிகரித்துள்ளது. இந்தப் பகுதியில் பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் இல்லம், உள்துறை, நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு ஆகிய நான்கு முக்கிய அமைச்சகங்களின் அலுவலகங்கள் உள்ளன.

ரயில் பவன், உத்யோக் பவன், சாஸ்திரி பவன் மற்றும் கிருஷி பவன் போன்ற முக்கியமான யூனியன் அரசு அலுவலகங்கள் இந்தியா கேட்டை ஒட்டிய கர்தவ்யா பாதைக்கு அருகில் அமைந்துள்ளன. 

மேலும் படிக்க | தில்லி முதல்வர் கூட்டிய அவசர கூட்டம்... யமுனையில் பெருகும் வெள்ளம்!

நீர்மட்டம் உயர்வதால் ஆற்றின் அருகே வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஹரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து அதிக தண்ணீர் திறக்கப்பட உள்ளதால், இந்திய நாடாளுமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் இந்தியா கேட் ஆகியவற்றைக் கொண்ட வரவிருக்கும் பகுதிகளும் நீரில் மூழ்கக்கூடும்.

யமுனையின் நீர்மட்டம் உயர என்ன காரணம்?
இமாச்சல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் ஹத்னிகுண்ட் அணை நிரம்பியுள்ளது. யமுனை ஆற்றின் நீர் மட்டம் உயர்ந்து வருவதில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியதால் தடுப்பணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.டேராடூனில் உள்ள தக்பதர் மற்றும் டெல்லியின் மேல்பகுதியில் உள்ள யமுனாநகரில் ஹத்னிகுண்ட் என, யமுனை ஆற்றில் இரண்டு பெரிய தடுப்பணைகள் உள்ளன. 

யமுனை ஆற்றில் அணைகள் இல்லை, எனவே, பருவமழையின் பெரும்பகுதி தடுக்கப்பட்டு, நீர்வரத்து கட்டுப்படுத்தப்படாமல் உள்ளது, இதன் விளைவாக பருவமழைக் காலத்தில் யமுனை ஆற்றில் வெள்ளம் ஏற்படுகிறது.

மத்திய நீர் ஆணையத்தின் (CWC) மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "கடந்த ஆண்டுகளை விட ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் டெல்லிக்கு வருவதற்கு குறைவான நேரமே எடுத்துக்கொண்டதை நாங்கள் கவனித்தோம். இதற்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்பு ஆகும். முதலில் நீர் பாய்வதற்கு அதிக இடம் இருந்தது. இப்போது, ஆக்ரமிப்பால் நதியின் கரைகள் குறுகியதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.  

இந்திய தேசிய கலை மற்றும் கலாச்சார பாரம்பரிய அறக்கட்டளையின் (INTACH) இயற்கை பாரம்பரியப் பிரிவின் முதன்மை இயக்குநர் மனு பட்நாகர், டெல்லியில் யமுனையில் சீற்றம் ஏற்படுவதற்கு குறுகிய காலத்தில் அதிக மழை பெய்வதற்கான முதன்மைக் காரணம் என்று கண்டறிந்தார்.

இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) நாட்டுப் பிரதிநிதி யஷ்வீர் பட்நாகர், யமுனையில் நீர் மட்டம் உயர்ந்ததற்கு மேல் நீர்ப்பிடிப்புப் பகுதி முழுவதும் பெய்த மழையே காரணம் என்று கூறினார்.

மேலும் படிக்க | வட இந்தியாவை புரட்டி போடும் மழை... யமுனை - பியாஸ் நதிகளில் கரை புரண்டு ஓடும் வெள்ளம்!

டெல்லியின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
யமுனை நீர் மட்டம் உயர்ந்து வருவதால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது அமைச்சரவை மற்றும் பிற மூத்த அதிகாரிகளின் அலுவலகங்கள் உள்ள டெல்லி செயலகம் வியாழக்கிழமை வெள்ளத்தில் மூழ்கியது. ராஜ்காட்டில் இருந்து டெல்லி செயலகம் வரையிலான சாலையும் நீரில் மூழ்கியது.

காஷ்மீர் கேட் மற்றும் புரானா லோஹே கா புல் இடையேயான ரிங் ரோடு பகுதி வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கீதா காலனியில் உள்ள மயானம், நீர்மட்டத்தின் தீவிர அதிகரிப்பு காரணமாக மூடப்பட்டது.

இதற்கிடையில், நிரம்பி வழியும் யமுனை நதியில் இருந்து தண்ணீர் ஐடிஓவை அடைந்தது, இது கிழக்கு டெல்லியிலிருந்து மத்திய டெல்லி மற்றும் கன்னாட் பிளேஸ் வரை பயணிப்பதற்கான முக்கிய பாதையாகும். இது தவிர, படகு காலனி, கீதா காலனி, காந்தி நகரின் சில பகுதிகள், அசோக் நகர், பாண்டவ் நகர் போன்ற பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.

சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள ரிங் ரோடு போன்ற பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், மஜ்னு கா திலாவை காஷ்மீரி கேட் ஐஎஸ்பிடியுடன் இணைக்கும் பாதை மூடப்பட்டது. டெல்லியில் உள்ள நிகாம் போத் காட் அருகே வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், யமுனை நீர் எச்சரிக்கை அளவைத் தாண்டியதால், தேசிய தலைநகர் ஜிடி கர்னல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

யமுனையின் நீர்மட்டம் உயர்ந்து, தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால், மகாத்மா காந்தி மார்க்கத்தில் ஐபி ஃப்ளைஓவர் மற்றும் சந்த்கி ராம் அகாரா, மகாத்மா காந்தி மார்க் காளிகாட் மந்திர் மற்றும் டெல்லி செயலகம், அவுட்டர் ரிங் ரோட், வஜிராபாத் பாலம் சந்த்கி ராம் அகாரா போன்ற பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

பெங்களூருவில் ஜூலை 17-18 தேதிகளில் காங்கிரஸ் தலைமையில் கூடும் 24 எதிர் கட்சிகள்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News