வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி!

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த லண்டன் நீதிமன்றம், அவரின் காவலை ஆகஸ்ட் 22-வரை நீட்டித்துள்ளது!

Last Updated : Jul 25, 2019, 03:55 PM IST
வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி! title=

பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த லண்டன் நீதிமன்றம், அவரின் காவலை ஆகஸ்ட் 22-வரை நீட்டித்துள்ளது!

மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பெற்ற ரூ.13,000 கோடி கடனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றார். 

லண்டனில் தஞ்சம் அடைந்த அவர், கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், ஜாமின் கேட்டு 3 முறை தாக்கல் செய்த மனுவையும் லண்டன் நீதிமன்றம் நிராகரித்தது. 

இதனிடைய நிரவ் மோடியை இந்தியா அழைத்து வர இந்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நிரவ் மோடி வழக்கு தொடர்பான ஆவணங்களையும் லண்டன் நீதிமன்றத்தில் இந்தியா தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் ஜாமின் கேட்டு லண்டன் நீதிமன்றத்தில் மீண்டும் நிரவ் மோடி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அவரின் ஜாமின் மனுவை தளளுபடி செய்ததுடன், நீரவ் மோடியின் காவலை ஆகஸ்ட் 22 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

Trending News