இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் எக்கச்சக்க புது வரவுகள்..மிஸ் பண்ணாம பாத்துருங்க..!

OTT Releases This Week : ஓடிடி தளங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களும் தொடர்களும் வெளியாக இருக்கின்றன. அவற்றின் லிஸ்டை இங்கு பார்ப்பாேம்.   

Written by - Yuvashree | Last Updated : May 15, 2024, 02:37 PM IST
  • இந்த வார ஓடிடி ரிலீஸ்
  • ஹாட்ஸ்பாட், தி பாய்ஸ் உள்பட பல படங்கள்
  • எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?
இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸாகும் எக்கச்சக்க புது வரவுகள்..மிஸ் பண்ணாம பாத்துருங்க..! title=

OTT Releases This Week : கடந்த சில ஆண்டுகளாக ஓடிடி தளங்களின் வருகை அபரிபிதமாக பெருகியுள்ளதை தொடர்ந்து, அதில் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்களின் லிஸ்டும் அதிகரித்து வருகிறது. திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் கூட, சிறிது நாட்களுக்குள்ளாகவே ஓடிடி தளங்களுக்கு விற்கப்பட்டு ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன. அந்த வகையில், இந்த வாரம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் ஓடிடி ரிலீஸ் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

தி பாய்ஸ்:

தமிழில் வெளியாகியுள்ள காமெடி திரைப்படம், தி பாய்ஸ். இந்த படத்தை சந்தோஷ் பீட்டர் ஜெயகுமார் எழுதி இயக்கி இருக்கிறார். ஹாரர் காமெடி படமான இதில், அர்ஷன், KPY வினோத், யுவராஜ் கணேசன், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தை வரும் 17ஆம் தேதி முதல் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம். 

ஹாட்ஸ்பாட்:

விக்னேஷ் கார்த்திக் எழுதி இயக்கியிருக்கும் படம், ஹாட்ஸ்பாட். இந்த படத்தில் அம்மு அபிராமி, கௌரி ஜி கிஷன், ஜனனி, ஆதித்த்யா பாஸ்கர், கலையரசன் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் தியேட்டரில் வெளியான போது நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை வரும் மே 17ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

ப்ளிங்க்:

கன்னட மொழியில் உருவாகியிருக்கும் த்ரில்லர் படம், ப்ளிங்க். இந்த படத்தில் தீக்‌ஷித் ஷெட்டி, மந்தாரா, கோபால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஒரு சிம்பிளான கதையை நல்ல படமாக எடுத்திருப்பதாக இந்த படத்திற்கு விமர்சனங்கள் எழுந்தன. இந்த படத்தை, வரும் 17ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் தளத்தில் பார்க்கலாம். 

ப்ரிஜ்ஜர்டன் சீசன் 3:

ஆங்கில தொடராக இருந்தாலும் இந்தியாவில் அதிக அளவு ரசிகர் கூட்டத்தை பெற்றிருக்கும் தொடர், Bridgerton. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடப்பது போல எழுதப்பட்டிருக்கும் இந்த கதையில், Bridgerton குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகள் ஒவ்வொருவரின் காதல் கதைகள் ஒவ்வொரு சீசனில் தெரிய வரும். அந்த வகையில், இந்த சீசனில் Collin Bridgerton மற்றும் Penelope-ன் காதல் கதை தொடர இருக்கிறது. இந்த தொடரை நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 17ஆம் தேதி முதல் பார்க்கலாம். 

மேலும் படிக்க | பிரைம் வீடியோவின் லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்! 2வது சீசன் ரிலீஸ் தேதி இதுதான்!

பாகுபலி க்ரவுன் ஆஃப் ப்ளட்:

ராஜமௌலி இயக்கிய படம், பாகுபலி. இதில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க அவருடன் அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன், ராணா டகுபதி, தமன்னா உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை தற்போது அனிமேஷன் வடிவில் இயக்கியிருக்கின்றனர். தெலுங்கு மொழியில் உருவாகியுள்ள இந்த தொடரை வரும் 17ஆம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்கலாம். 

வித்யா வாசுலா அஹாம்:

மோதலும் காதலும் நிறைந்த காமெடி கதை இது. இந்த படத்தை மனிகாந்த் கெலி இயக்கியிருக்கிறார். ராகுல் விஜய், சிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் கதாநாயகன் கதாநாயகியாக நடித்திருக்கின்றனர். இந்த படம் தற்போது ஆஹா ஓடிடி தளத்தில் வரும் மே 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது. 

பிற ஓடிடி ரிலீஸ்கள்:

மேற்கூறிய படங்கள் மற்றும் தொடர்களை தவிர, இன்னும் சில படங்களும் தொடர்களும் ஓடிடி தளங்களில் வரும் 17ஆம் தேதி வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம். 

>சாரா ஹாடே சாரா பாச்கே- இந்தி- ஜியோ
>மேட்கவோன் எக்ஸ்பிரஸ் - இந்தி- அமேசான் ப்ரைம்
>மேடம் வெப்- ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்
>பேக்ஸ்டர் தி நக்ஸல் ஸ்டோரி - இந்தி- ஜீ 5
>ஷரதுலு வர்திஸ்தாய் - தெலுங்கு-ஆஹா
>அவுட்டர் ரேஞ்ச் சீசன் 2 - ஆங்கிலம் -  ப்ரைம் சீரீஸ்
>தி 8 ஷோ - கொரியன் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்
>தலைமை செயலகம் -தமிழ் - ஜீ 5 தமிழ் தொடர்
>லபான் - இந்தி - சோனி லிவ் தொடர்
>ஜக்கி - பஞ்சாபி - முபி
>பவர் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ்  டாக்குமெண்டரி
>ஆஷ்லி மேடிசன் - ஆங்கிலம் -நெட்ஃப்ளிக்ஸ் தொடர்
>தி பிக் சிகார் - ஆங்கிலம் - ஆப்பிள் தொடர்

மேலும் படிக்க | “நான் Gay-வா?” சுசித்ராவிற்கு பதிலடி கொடுத்த கார்த்திக் குமார்! வைரல் வீடியோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News