குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தியாவின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள குஜராத் மாநிலத்தில், 33 மாவட்டங்கள், 182 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலதிற்கு வருகிற டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
இதில்,முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும்-இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான முடிவுகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அங்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க. தொடர்ந்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த மூன்று நாட்களாக தொடர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த திங்கட்கிழமை குஜராத் மாநிலத்துக்கு வந்த அவர் நன்பகல் வரை கட்ச் மற்றும் பரூச் மாவட்டத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இதை தொடர்ந்து நேற்றும் பிரதமர் மோடி வல்சாத் தர்மபுரயம் என்ற இடத்தில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இவருடைய சூறாவளி பிரச்சாரம் மாநில தலைநகர் சூரத் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முடிவுக்கு வந்தது;
மேலும்,அவருடைய பயண திட்டம் சுமார் 30 பொதுகூட்டங்களில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து தற்போது, குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து ஆலோசனை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில்;-காங்கிரசின்ஆட்சியில் இருக்கும் போது சட்டம் ஒழுங்கு, வன்முறை,சீர்கேடு,வறுமை,போன்றவை மேலோங்கி காணப்பட்டது என்றும் பா.ஜ.க. மாறியது மட்டுமல்லாமல், குஜராத் முழுவதிலும் ஒரு மாற்றம் ஏற்ப்பட்டது. என்று தொடர்ந்து காங்கிரஸ் விமர்சித்து வந்த பிரதமர் மோடி.
பாஜக தேசிய செயற்குழு தலைவர் அமித் ஷா அயோத்தி வழக்கு தொடர்பாக டாக்டர் கபில் சிபலை தாக்கிய பிறகு, பிரதமர் மோடி இன்று, '' பா.ஜ., எம்.பி., கபில் சிபல் பாபர் மசூதிக்கு முறையிடுகிறார். ஆனால், 2019 வரை விசாரணை முடிக்கப்பட வேண்டும் என்று அவர் சொல்வது சரியானதா? அவர் ஒரு ராம் மந்திர் ஏன் தேர்தலுடன் இணைக்க வேண்டும்?
மேலும்,"இப்போது காங்கிரஸ் ராம் மந்திர் தேர்தல்களுடன் தொடரப்பட்டுள்ளது, அவர்கள் நாட்டைப் பற்றி கவலைப்படுவதில்லை."என்றும் சுட்டி காட்டியுள்ளார்.
When Triple Talaq matter was in SC, Government had to put their affidavit, newspapers commented that Modi will remain silent because of UP polls. People told me not to speak on the matter else there will be losses in elections: PM in #Gujarat's Dhandhuka #GujaratElection2017 pic.twitter.com/JM4uHdWUZ7
— ANI (@ANI) December 6, 2017