மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்தததையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 2, 2020, 05:59 PM IST
  • அமித் ஷா, இன்று தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட செய்தியை தன் ட்விட்டர் பதிவின் மூலம் உறுதிபடுத்தினார்.
  • கடந்த சில நாட்களில் தன்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களை COVID-19 க்கு பரிசோதித்துக்கொள்ளுமாறு அமித் ஷா வேண்டுகோள்.
  • அமித் ஷா விரைவாக குணமடைய கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் – ஜெ.பி.நட்டா.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்!! title=

புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா (Amit Shah) அவர்களின் கோவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனை முடிவுகள் நேர்மறையாக வந்தததையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

55 வயதான அவர், இன்று இந்த செய்தியை தன் ட்விட்டர் பதிவின் மூலம் உறுதிபடுத்தினார்.

"எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் என் உடல்நிலை நன்றாக உள்ளது," என்று அவர் கூறினார்.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களில் தன்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்களிடம் தங்களை COVID-19 க்கு பரிசோதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"கடந்த சில நாட்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து தங்களை தனிமைப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் ட்விட்டரில் ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோவிட் -19 சோதனை முடிவு நேர்மறையையாக வந்த செய்தி கிடைத்தது. அவர் விரைவாக குணமடைய கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்." என்று எழுதியுள்ளார்.

கடந்த வாரம் கோவிட் -19 –ஆல் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேச முதல்வர், "கடவுள் விரைவில் உங்களை முழுமையாக குணமாக்குவார். நீங்கள் முழு ஆற்றலுடனும் பணியில் மீண்டும் சேர வேண்டும். உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்!" என்று கூறியுள்ளார்.

பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் "அமித் ஷாவுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படதாக செய்தி ஊடகங்களில் வருகின்றன. அவர் விரைவாக குணமடைந்து விரைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்கிறேன்” என்று எழுதியுள்ளார்.

அருணாச்சல பிரதேச முதல்வர் "நீங்கள் விரைவாக குணமடைய எங்கள் வாழ்த்துக்கள். Get well soon @AmitShah ji” என்று அவருக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா "நீங்கள் விரைவாக குணமடைய நல்வாழ்த்துக்கள் அமித்ஷா ஜி. உங்கள் உறுதியான மன வலிமையின் விளைவால் நீங்கள் விரைவில் குணமடைவீர்கள்” என்று எழுதினார்.

பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல், “அமித் ஷா ஜி, நீங்கள் விரைவில் குணமைடைய எங்கள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்” என்று ட்வீட் செய்துள்ளார். 

ALSO READ: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடல் நல பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதி!!

Trending News