அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவிலை வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக திறக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் பகுதியில் பிரமாண்ட ராமர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில் பழங்கால கோயியின் தூண்கள் சிலைகள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோயில் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கோயிலின் பல சிலைகள் மற்றும் தூண்களின் புகைப்படத்தை ஸ்ரீ ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் ட்விட்டரில் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
"ஸ்ரீ ராம் ஜென்மபூமியில் கட்டுமான பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கோவிலை சேர்ந்தவை இவை. இவற்றில் பல சிலைகள் மற்றும் தூண்கள் அடங்கும்" என்று X தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில் ராய் கூறினார். அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களின் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலைகள், தூண்கள் போன்றவை, தற்காலிக கொட்டகையின் கீழ் இருப்பதை புகைப்படத்தில் காணலாம்.
அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா
இதற்கிடையில், வாரணாசியைச் சேர்ந்த பூசாரிகள், அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ஜனவரி 17 ஆம் தேதி முதல் இதற்கான ஆன்மீக விழாக்கள் நடைபெறும் என்றும், ராம் லல்லா என்னும் குழந்தை ராமர் கருவறையில் ஸ்தாபனம் செய்யப்பட்டு, கோயில் கும்பாபாபிஷேகம் உட்பட ஐந்து நாள் சடங்குகள் நடத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். ராம் லல்லா என்னும் குழந்தை ராமர் ஜனவரி 21-22, 2024 ஆகிய தேதிகள் கருவறையில் ஸ்தாபனம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிகுந்த கலைநுட்பத்துடன் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், கற்கள் என பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது ஸ்ரீராமர் ஆலயம். இது தவிர ராமர் கோவிலை சுற்றி 100 ஏக்கர் பரப்பளவில் நூலகம், அருங்காட்சியகம், தியான மண்டபம், உணவு சாப்பிடும் இடம் உள்பட பிற கட்டடங்கள் அமைய உள்ளன.
மேலும் படிக்க | அயோத்தி ராமர் கோவிலை பாதுகாக்க 400 கிலோ பிரம்மாண்டமான பூட்டு! பிரபல அலிகர் பூட்டு
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ள தகவல்
ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை இது குறித்து கூறுகையில், அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு தேதி ஜனவரி மூன்றாவது வாரத்தில் 2024 ஜனவரியில் இருக்கும். பிரதமர் நரேந்திர மோடி அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். பிரதமர் அலுவலகம் (PMO) இதற்கான ஒப்புதலை வழங்கிய பிறகு இறுதி அட்டவணை நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ ராம ஜென்ம பூமி தொடர்பான வழக்கு
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக நீண்ட நாட்களாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2019 ம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ம் தேதி அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அயோத்தி பாபர் மசூதி கட்டுமானம் கிடப்பில் போடப்பட்டது! அறக்கட்டளையின் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ