அயோத்தி ராமர் கோவிலை பாதுகாக்க 400 கிலோ பிரம்மாண்டமான பூட்டு! பிரபல அலிகர் பூட்டு

Ayodhya Ram Mandir: அயோத்தியில் கட்டப்படும் பிரமாண்ட ராமர் கோவில் குறித்து சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் கோயில் திறக்கப்படும் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் தங்கள் ராம்லாலாவை எளிதாக தரிசிக்க முடியும்

தரிசனத்திற்காக கோவில் திறக்கப்பட்டாலும், தரிசன நேரம் தவிர, மற்ற நேரங்களில் கோவில் பூட்டப்படும் அல்லவா? அதற்காக 400 கிலோ பூட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. ராமர் கோவிலை பாதுகாக்கும் பிரம்மாண்டமான பூட்டு மற்றும் அதுகுறித்த தகவல்கள்

1 /8

அயோத்தி ராமர் கோவிலில் உள்ள ராமரை பாதுகாக்க 400 கிலோ பூட்டு தயார்

2 /8

ராமர் பிறந்த அயோத்தியில், அவருக்காக கட்டப்படும் கோவில், ஜனவரி மாதம் பக்தர்களுக்காக திறக்கப்படும் என்று நம்பப்படுகிறது

3 /8

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.கோவிலை பாதுகாக்க பிரம்மாண்டமான பூட்டு தயாரிக்கப்பட்டுள்ளது

4 /8

இந்த பூட்டு ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்தது? தெரிந்துக் கொள்வோம்  

5 /8

இந்த பூட்டின் எடை 400 கிலோ. இதன் நீளம் 10 அடி, அகலம் 4.6 அடி அகலம் மற்றும் 9.5 அங்குல தடிமன் கொண்டது. 

6 /8

இந்த பூட்டை சத்ய பிரகாஷ் சர்மா என்ற பக்தர் செய்தார். இதுவே கையால் செய்யப்பட்ட உலகின் மிகப்பெரிய பூட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

7 /8

இந்த பூட்டை உருவாக்க சுமார் 2 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அதில் ராமர் படம் உள்ளது. 

8 /8

 2 லட்சம் ரூபாய் செலவில் இந்த பூட்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பூட்டை உருவாக்கிய சத்ய பிரகாஷ் ஷர்மா ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளைக்கு பரிசளிக்க விரும்புவதாக கூறுகிறார்.