சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து உலக வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ள இந்தியா!

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்பது வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1960அ ஆண்டில் சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் உலக வங்கியும் அடக்கம். இந்த ஒப்பந்தத்தின்படி, சில விதிவிலக்குகளைத் தவிர, சிந்து நதி நீரை இந்தியா தடையின்றி பயன்படுத்தலாம். இந்நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான சிக்கலைத் தீர்க்க நடுவர் நீதிமன்ற பெஞ்சையும் நடுநிலை நிபுணரையும் நியமிக்க இரண்டு தனித்தனி செயல்முறைகளைத் தொடங்கும் உலக வங்கியின் முடிவை இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 3, 2023, 10:04 AM IST
  • சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் பிரிவு 12 (3)வது விதிகளின் கீழ் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
  • 1960ல் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் உலக வங்கியும் அடங்கும்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து உலக வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ள இந்தியா! title=

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்பது வருட பேச்சுவார்த்தைக்குப் பிறகு 1960அ ஆண்டில் சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் உலக வங்கியும் அடக்கம். இந்த ஒப்பந்தத்தின்படி, சில விதிவிலக்குகளைத் தவிர, சிந்து நதி நீரை இந்தியா தடையின்றி பயன்படுத்தலாம். இந்நிலையில், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பான சிக்கலைத் தீர்க்க நடுவர் நீதிமன்ற பெஞ்சையும் நடுநிலை நிபுணரையும் நியமிக்க இரண்டு தனித்தனி செயல்முறைகளைத் தொடங்கும் உலக வங்கியின் முடிவை இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், 'இந்த ஒப்பந்தம் குறித்து (உலக வங்கி) எங்களுக்கு விளக்கமளிக்கும் நிலையில் இருப்பதாக இந்தியா நினைக்கவில்லை. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே  ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இருதரப்பு ஒப்புக் கொண்டுள்ள விதிகளைக் கொண்டுள்ளது. 1960 ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், 3 கிழக்கு நதிகளான சட்லஜ், பியாஸ் மற்றும் ரவி ஆகியவற்றின் நீர் தடையின்றி இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்டது, அதே நேரத்தில் 3 மேற்கு நதிகளான சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகியவற்றின் நீர் பாகிஸ்தானுக்கு செல்கிறது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்தத்தில் மாற்றங்களுக்கான அறிவிப்பை வழங்குவதன் நோக்கம், திருத்தம் செய்வது குறித்து, 90 நாட்களுக்குள் பாகிஸ்தானுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதாகும் என்று பாக்சி கூறினார். இந்த ஆறு தசாப்த கால ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தகராறை தீர்க்கும் பொதுவான நடைமுறைக்கு இணங்குவதற்கான அதன் நிலைப்பாட்டின் காரணமாக முதல் முறையாக இந்த நோட்டீஸ் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டது. 

மேலும் படிக்க | உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்... நாடாளுமன்றமும் செயல்பட முடியாத நிலை!

பாகிஸ்தானின் நிலைப்பாடு பற்றிய தகவல் இல்லை

வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி மேலும் கூறுகையில், 'பாகிஸ்தானின் நிலைப்பாடு குறித்து எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. உலக வங்கியின் பதில் அல்லது கருத்து பற்றியும் எனக்குத் தெரியவில்லை.' இந்த விஷயத்தில் இரண்டு வெவ்வேறு நடைமுறைச் சிக்கல்களை ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பே உலக வங்கி ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.  இது ஒப்பந்த விதிகளை மீறிய செயலாகும் என்பதால், இந்தியா இது குறித்து கேள்வியை எழுப்பியுள்ளது. இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஒன்பது வருட பேச்சு வார்த்தைக்குப் பிறகு 1960ல் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் உலக வங்கியும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தின்படி, சில விதிவிலக்குகளைத் தவிர, கிழக்கு நதிகளின் நீரை இந்தியா தடையின்றி பயன்படுத்தலாம். இந்தியா தொடர்பான விதிகளின் கீழ், போக்குவரத்து, மின்சாரம் மற்றும் விவசாயத்திற்கு ரவி, சட்லஜ் மற்றும் பியாஸ் நதிகளின் தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு இந்தியாவுக்கு உரிமை உள்ளது.

கிஷன்கங்கா மற்றும் ரேட்லே நீர்மின்சாரத் திட்டங்கள் தொடர்பான பிரச்சினையில் உள்ள கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதில் அண்டை நாடு தனது நிலைப்பாட்டில் ஒட்டிக்கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு இந்தியா இந்த நோட்டீஸை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் பிரிவு 12 (3)வது விதிகளின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டில், இந்திய கிஷன்கங்கா மற்றும் ரேட்லே நீர்மின் திட்டங்களில் தொழில்நுட்ப ஆட்சேபனைகளை விசாரிக்க நடுநிலை நிபுணரை நியமிக்குமாறு பாகிஸ்தான் கோரியிருந்தது. 2016 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் ஒருதலைப்பட்சமாக இந்த கோரிக்கையில் இருந்து விலகி, இந்த ஆட்சேபனைகளை நடுவர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முன்மொழிந்தது. இந்த விவகாரம் தொடர்பாக நடுநிலை நிபுணர் ஒருவரை அனுப்புமாறு இந்தியா தனித்தனியாக கோரிக்கை விடுத்திருந்தது.

ஒரே நேரத்தில் இரண்டு செயல்முறைகளைத் தொடங்குவது மற்றும் சீரற்ற அல்லது முரண்பாடான முடிவுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்படுத்தி, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை பாதிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கும் என்று இந்தியா நம்புகிறது.

மேலும் படிக்க | பாலியல் தொழிலுக்காக பாகிஸ்தானிய பெண்களை 'இறக்குமதி' செய்யும் சீனா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News