உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்... நாடாளுமன்றமும் செயல்பட முடியாத நிலை!

கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில்,  தற்போது மின்சார பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 24, 2023, 01:21 PM IST
  • பாகிஸ்தான் மின்சாரத்தின் நேஷனல் கிரிட் அமைப்பின் அதிர்வெண் செயலிழந்தது.
  • கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.
  • கிரிட் பழுதால் 117 நிலையங்களில் மின்சாரத் தடை.
உணவு, மின்சாரம் இன்றி தவிக்கும் பாகிஸ்தான்... நாடாளுமன்றமும் செயல்பட முடியாத  நிலை! title=

 

கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், பாகிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் விண்ணை தொடுவதாலும், உணவு பொருட்கள் பற்றாக்குறை நீடிப்பதாலும், அங்கு மக்கள் உணவுக்காக அடித்திக் கொள்ளும் வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் வைரலாகி வந்த நிலையில்,  தற்போது மின்சார பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. பெரிய அளவில் மின்தடை ஏற்பட்டதால், முக்கிய நகரங்களில் மின்சாரம் இல்லாமல் போனது. பாகிஸ்தானின் ஜியோ நியூஸ், கராச்சி மற்றும் லாகூரில் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது.

கிரிட் பழுதால் 117 நிலையங்களில் மின்சாரத் தடை

முன்னதாக திங்கட்கிழமை காலை 7.34 மணியளவில், பாகிஸ்தான் மின்சாரத்தின் நேஷனல் கிரிட் அமைப்பின் அதிர்வெண் செயலிழந்ததன் காரணமாக நாடு முழுவதும் மின்சாரம் வினியோகம் இல்லாமல் ஸ்தம்பித்தது. தலைநகர் இஸ்லாமாபாத்திள் உள்ள மின் சப்ளை செய்யும் நிறுவனமான ISCO, 117 கிரிட் நிலையங்களில் மின்சார வினியோகம் நிறுத்தப்பட்டதை உறுதி செய்தது. மின்சார விநியோகத்தை சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் எரிசக்தி அமைச்சகத்தை மேற்கோள்காட்டி ரேடியோ பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

மூடப்பட்டுள்ள பாகிஸ்தான் நாடாளுமன்றம்

 பாகிஸ்தானில் நிலவும் மின்வெட்டுக்கு மத்தியில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் மூன்று நாட்களாக மூடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள தேசிய சட்டமன்றம் முதல் செனட் செயலகம் வரை, அடுத்த மூன்று நாட்களுக்கு செயல்படாது என கூறப்படுகிறது. கட்டிடத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதே இதற்கு காரணம் என பார்லிமென்ட் நிர்வாகம் கூறியுள்ளது. ஆனால் கஜானா காலியாக உள்ளதா, மின்சார தட்டுபாடு தான் காரணமாக என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர். முன்னதாக திங்கள்கிழமை காலை பாகிஸ்தானில் தேசிய மின்கட்டமைப்பு செயலிழந்ததால் மின்சாரம் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தான் முழுவதும் மின்சார வினியோகம் இல்லாமல் ஸ்தம்பித்தது.

மேலும் படிக்க | பாலியல் தொழிலுக்காக பாகிஸ்தானிய பெண்களை 'இறக்குமதி' செய்யும் சீனா!

பாகிஸ்தான் நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மின்கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டாலும்,  மின்சாரம் கசிவினால் ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய முழு வயரிங் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறதும். சம்பவம் குறித்த விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் செனட் தலைவர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோர் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற மாளிகை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர். இதன் காரணமாக திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் நாடாளுமன்ற வளாகத்தை செனட் செயலகம் மூடியது. செனட் அவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவில், ஜனவரி 26ஆம் தேதி மாலை 4 மணி முதல் காலை 11 மணி வரை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற இருந்த கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | 50 வயதில் 60 வது குழந்தை; அடுத்த ரிலீஸுக்கு மனைவியை தேடும் நபர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News