'கிரிக்கெட் பரம்பரை'யிலிருந்து இன்னொரு எம்.பி?! - பாஜக மாஸ்டர் ப்ளான்?

மேற்கு வங்கம் வருகை வந்த அமைச்சர் அமித் ஷாவுக்கு சவ்ரவ் கங்குலி சிறப்பு விருந்து கொடுத்து கெளரவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 10, 2022, 07:14 PM IST
  • முன்னாள் வீரர் கவுதம் காம்பிர் சில ஆண்டுகளுக்கு முன் பாஜகவில் இணைந்து டெல்லி எம்.பி ஆனார்.
  • மற்றொரு முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் ஆத் ஆத்மி வாயிலாக ராஜ்யசபா எம்.பி ஆனார்.
  • சவ்ரவ் கங்குலியின் மனைவியை எம்.பியாக்க பாஜக முயற்சி எனத் தகவல்.
'கிரிக்கெட் பரம்பரை'யிலிருந்து இன்னொரு எம்.பி?! - பாஜக மாஸ்டர் ப்ளான்? title=

இந்தியாவில் அரசியலையும் சினிமா பிரபலங்களையும் பிரித்துப் பார்க்க முடியாது எனச் சொல்வதுண்டு. அந்த வரிசையில் விளையாட்டுத் துறை பிரபலங்களையும் தற்போது இணைத்துக்கொள்ளலாம்.

சில ஆண்டுகளுக்கு முன் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர் பாஜகவில் இணைந்து டெல்லி எம்.பி ஆனார். மற்றொரு முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் ஆத் ஆத்மி வாயிலாக அண்மையில் ராஜ்யசபா எம்.பி ஆனார்.  அந்த வரிசையில் தற்போது மற்றொரு கிரிக்கெட் பிரபலத்தை பாஜக குறிவைத்துள்ளது.  ஆனால் நேரடியாக அல்லாமல் அவரது மனைவிக்கு வலைவீசியுள்ளதாம் பாஜக. ஆம், முன்னாள் கிரிக்கெட் வீரர் சவ்ரவ் கங்குலியின் மனைவி டோனா கங்குலிதான் அவர்.

                                                  

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சவ்ரவ் கங்குலி, தற்போது பிசிசிஐ தலைவராக உள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாதான் பிசிசிஐயின் செயலாளராகத் தற்போது உள்ளார். இதனிடையே, மேற்கு வங்கம் வருகை வந்த அமித் ஷாவுக்கு சவ்ரவ் கங்குலி சிறப்பு விருந்து கொடுத்து கெளரவித்துள்ளார்.

மேலும் படிக்க| ரோகித் அவுட் சர்ச்சை: மூன்றாவது நடுவரை விளாசும் மும்பை ரசிகர்கள்

                                                                                 

 

இந்த விருந்தில் பாஜக நிர்வாகிகளும் கூட கலந்துகொண்டுள்ளனர். அன்று மாலை நடந்த கலை நிகழ்ச்சியில் கங்குலியின் மனைவி டோனா கங்குலி நடன நிகழ்ச்சியை நடத்த, இதில் அமித் ஷாவும் கலந்துகொண்டுள்ளார்.

இந்நிலையில், கங்குலியின் மனைவியை ராஜ்ய சபா உறுப்பினராக்க அமித் ஷா பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. சில  ராஜ்ய சபா உறுப்பினர்களின் பதவிகள் காலியாவதால் அவ்விடத்தில் கங்குலியின் மனைவியை நியமிக்க ஆலோசனைகள் நடத்தப்பட்டுவருகிறதாம். இதனால் விரைவிலேயே அவர் ராஜ்ய சபா உறுப்பினர் ஆவது உறுதி என அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டுவருகிறது.

மேலும் படிக்க | மக்கள் தொகை கணக்கெடுப்பு: e-census குறித்து அறிவித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

ChiranjeeviMahesh BabuAcharya

 

Trending News