ICSE 10 ஆம் வகுப்பு, ISC 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை; சரிபார்ப்பது எப்படி..!!

ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி வாரியம், 2021 ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை  நாளை மாலை 3 மணிக்கு  அறிவிக்கும். ஏறக்குறைய 3 லட்சம் மாணவர்கள் ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி அறிவிக்கும் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 23, 2021, 04:30 PM IST
ICSE  10 ஆம் வகுப்பு, ISC  12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை; சரிபார்ப்பது எப்படி..!! title=

ICSE (Class 10th) and ISC (Class 12th) result: ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி வாரியம், 2021 ஆண்டுக்கான தேர்வு முடிவுகளை  நாளை மாலை 3 மணிக்கு  அறிவிக்கும். ஏறக்குறைய 3 லட்சம் மாணவர்கள் ஐ.சி.எஸ்.இ., ஐ.எஸ்.சி அறிவிக்கும் தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள். தேர்வு முடிவுகள் ஜூலை 24 சனிக்கிழமையன்று கவுன்சிலின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களான cisce.org மற்றும் results.cisce.org  வலைதளங்களில் முடிவுகள்  வெளியாகும்.

வாரிய செயலாளர் ஜெர்ரி அராத்தூன் வெள்ளிக்கிழமை  தேர்வு முடிவுகளை அறிவிப்பதற்கான தேதி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். "10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளின் முடிவுகள் ஜூலை 24 சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

ALSO READ: தமிழக பள்ளிக் கல்வித்துறை 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ICSE 10 ஆம் வகுப்பு ISC 12 ஆம் வகுப்புகளின் தேர்வு முடிவுகள்: மதிப்பெண்களை தெரிந்துகொள்வது எப்படி?

- கவுன்சிலின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் மாணவர்கள் தங்கள் முடிவுகளை cisce.org மற்றும் results.cisce.org ஆகிய வலைதளங்களில் பெறலாம்.

- 'Results 2021' என்ற இடத்தில் கிளக் செய்யவும்

- மாணவர்களில் தனிப்பட்ட ஐடி, குறியீட்டு எண் மற்றும் CAPTCHA உள்ளிட்ட தேவையான தகவல்களை உள்ளிடவும்

- அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்த பிறகு, submit என்பதைக் கிளிக் செய்க

- தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

- எதிர்கால தேவைக்காக, அதனை பதிவிறக்கம் செய்து அச்சிடுக.

முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் cisce.org வலைத்தளத்திலும் பார்க்கலாம்.  இது தவிர, எஸ்எம்எஸ் மற்றும் செயலி மூலமாகவும் முடிவுகளை பெறலாம்.

ALSO READ: Tamil Nadu: 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News