சென்னை: கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கான இறுதி ஆண்டு தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி வழங்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த விதத்தில் மதிப்பீடுகள் வழங்கப்படும் என்பது குறித்து அரசு விரைவில் அறிவிக்கும் என தெரிவிக்கப்படுள்ளது.
10 ஆம் வகுப்பு முடிந்து 11 ஆம் வகுப்புக்கு செல்லவுள்ள மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் 11ஆம் வகுப்புக்கான சேர்க்கை (Class 11 Admission) நடத்தப்படும் என தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையர் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் 9 ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வி ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
- தற்போது 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் 9 ஆம் வகுப்பின் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்ச்சி பெறுவார்கள்.
- 2019- 2020 ஆம் கல்வியாண்டில் ஒன்பதாம் வகுப்பில் படித்த மாணவர்கள் அவ்வகுப்பின் காலாண்டு மற்றும் அரையாண்டு ஆகிய இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் எந்த தேர்வில் அதிக மதிப்பெண் உள்ளதோ, அந்த மதிப்பெண்ணை கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
ALSO READ: Tamil Nadu: சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
- ஒரு மாணவர் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் இரண்டையும் எழுதி, ஏதாவது பாடத்தில் தேர்ச்சி பெறாமல் இருந்தால், அந்த பாடத்தில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்ணை வழங்கப்படும்.
- ஒரு மாணவர் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு வராத நிலையில், அந்த மாணவருக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் வழங்கப்படும்.
- ஒரு மாணவர் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை எழுதி அதில் ஒன்றில் மட்டும் தேர்ச்சி பெற்றால், அந்த மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
- 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு, 9 ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் பட்டியல் மற்றும் சான்றிதழ்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொள்ள, அனைத்து பள்ளிகளுக்கும் (Tamil Nadu Schools) புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
ALSO READ: Education: தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஆணையம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR