விடாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஜீலம் ஆற்றில் வெள்ளஅபாய எச்சரிக்கை!!
வட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் பல மாநிலங்களில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன.
இதனையடுத்து அனந்த்நாக் மாவட்டம் சங்கம் பகுதியில், ஜீலம் ஆற்றில் வெள்ளநீர் அபாய கட்டத்தை எட்டியுள்ளது. கன மழை காரணமாக மலைப்பாங்கான சில பகுதிகளில் லேசான நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து காஷ்மீரில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது என நேற்றுதெரிவித்திருந்தது.
காஷ்மீரில் தற்போது கவர்னர் ஆட்சி அமலில் உள்ளதால், வெள்ள பாதிப்புக்கள் குறித்து கவர்னர் ஆய்வு செய்து வருகிறார். விடாமல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஜீலம் ஆற்றில் அபாய அளவை எட்டும் அளவிற்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஜீலம் ஆற்றின் தாழ்வான கரையோர பகுதிகளில் வசிப்பவர்கள் வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் பாலங்கள் நீரில் மூழ்கி உள்ளன.
இந்நிலைய்ல், 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளதால் காஷ்மீரில் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. அமர்நாத் யாத்திரை செல்லும் பாதையில் பல இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் யாத்திரீகர்கள் வேறு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.