நீதிபதி கர்ணன் விவகாரம் உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்யவேண்டு - திருமாவளவன்

Last Updated : May 10, 2017, 07:51 PM IST
நீதிபதி கர்ணன் விவகாரம் உச்சநீதிமன்றம் மறு ஆய்வு செய்யவேண்டு - திருமாவளவன் title=

நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை உத்தரவு அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பாராளுமன்ற குழு மூலம் தான் நீதிபதிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று திருமாவளவன் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீதிபதி கர்ணனுக்கு ஆறுமாத சிறை தண்டனை விதித்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறுவது கண்டனத்திற்குரியது. மேலும் ஊடகங்கள் அவரது பேட்டிகளையோ அறிக்கைகளையோ வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது ஊடக சுதந்திரத்தைப் பறிக்கும் விதமாக உள்ளது. இதனை உச்சநீதிமன்றமே மறு ஆய்வு செய்யவேண்டு என கூறியுள்ளார். நீதிபதி கர்ணனுக்கு சிறை தண்டனை விதித்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. ஒரு நீதிபதியை விசாரிக்க வேண்டும் என்றால் அது பாராளுமன்ற குழு மூலம் தான் விசாரிக்க வேண்டும் எனவும் கூறினார்.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ள நிலையில், அவரை கைது செய்ய மேற்கு வங்க போலீசார் காளஹஸ்திக்கு சென்று உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News