காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்

உண்டியல் நிரம்பிவிட்டால், தேவஸ்தான (TTD) ஊழியர்கள் அதற்கு மேல் போட அனுமதிக்க மாட்டார்கள். உண்டியலில் சீல் வைத்து அங்கிருந்து அப்புறப் படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 24, 2021, 09:52 AM IST
  • உண்டியல் நிரம்பிவிட்டால், தேவஸ்தான (TTD) ஊழியர்கள் அதற்கு மேல் போட அனுமதிக்க மாட்டார்கள்.
  • ஏழுமலையான் உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக பக்தர்கள் வரிசையில் நின்று காத்திருப்பதை பார்க்கலாம்.
  • உண்டியலில் சீல் வைத்து அங்கிருந்து அப்புறப் படுத்தும் பணி மேற்கொள்ளப்படும்.
காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் title=

திருமலை திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.  திருப்பதில் உள்ள பிரம்மாண்டமான உண்டியலில் ஏழுமையானுக்கு காணிக்கைகள், பொன், வெள்ளி, பணம் என ஏராளமான காணிக்கைகள் குவியும். 

"காவாளம் " என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் என்பது ஒரு பெரிய பித்தளை அண்டா துணியால் சுற்றப்பட்டு ஒரு வண்டியில் வைக்கப்பட்டு நம் பார்வைக்கு தெரியாமல் நிறுத்தப்பட்டிருக்கும். காணிக்கைகள் நிரம்பியதும், அந்த உண்டியலை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வேறொரு புதிய உண்டியல் அங்கு வண்டியில் கொண்டு வந்து நிறுத்தப்படும்.

உண்டியல் நிரம்பியதும் உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு ஒரு உண்டியலைக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள். காலியாக வைக்கப்படும் உண்டியல் உடனடியாக நிறைந்து வேறு ஒரு உண்டியலை மாற்றும் நிகழ்வு திருப்பதி கோவிலில் சர்வ சாதாரணமாக நடக்கும் நிகழ்வு.

திருப்பதி (Tirupati) ஏழுமலையான் உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக பக்தர்கள் வரிசையில் நின்று காத்திருப்பதை பார்க்கலாம். அந்த உண்டியல் நிரம்பிவிட்டால், தேவஸ்தான (TTD) ஊழியர்கள் அதற்கு மேல் போட அனுமதிக்க மாட்டார்கள். உண்டியலில் சீல் வைத்து அங்கிருந்து அப்புறப் படுத்தும் பணி மேற்கொள்ளப்படும். அந்த சமயத்தில் காணிக்கை செலுத்துவதற்காக காத்திருக்கும் பக்தர்களில் இருவரை தேவஸ்தான் ஊழியர்கள் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். 

”இந்த உண்டியல் நிரம்பிவிட்டது. இதை முறையாக, நன்றாக சீல் செய்து எடுத்துக் கொண்டு போனார்கள். அப்போது நான் உடன் இருந்தேன் " என்று அந்த இரண்டு பக்தர்களும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டும். 

ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன

இதில் கையெழுத்திட தயக்கம் தேவையில்லை. ஏனென்றால், இது சம்பிரதாயத்துக்காக கடைபிடிக்கப்படும் ஒரு நடவடிக்கை. காலம் காலமாக பின்பற்றப்படும் நடைமுறை.  அதை இன்றும் விடாமல் கடைபிடித்து வருகிறது திருப்பதி தேவஸ்தானம்.

உண்டியலை அப்புறப்படுத்தும் போது சாட்சிக் கையெழுத்துப் போட்ட அந்த இரண்டு நபர்களுக்கு மீண்டும் ஒருமுறை திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய, அதுவும் வெகு அருகில் அழைத்துச் சென்று தரிசனம் செய்ய வாய்ப்பு கொடுக்கப்படும். மேலும் இந்த தரிசனத்தின் போது, அந்த குறிப்பிட்ட பக்தர்களை எவரும் அவசரப்படுத்த மாட்டார்கள். அதனால் நின்று நிதானமாகப் ஏழுமையானை தரிசனம் செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும்.

ALSO READ | TTD: ஜம்முவில் ஏழுமலையான் கோயிலுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News