பக்தர்களுக்கு எச்சரிக்கை! திருப்பதியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு!

கொரோனா தொற்று பரவலை தடுக்க திருப்பதியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 23, 2021, 07:08 PM IST
பக்தர்களுக்கு எச்சரிக்கை! திருப்பதியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு! title=

இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன. நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இன்றைய (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி, நாட்டில் 3,32,730 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டிலும் வெறும் 24 மணி நேரத்தில் 300,000 தொற்று பாதிப்பு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை. நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மற்றும் நிலவி வருகிறது, இந்தியாவில் ஒரே நாளில் , 2,263 இறப்புகள் பதிவாகியுள்ளன.

ஆந்திர மாநிலம் திருப்பதி (Tirupati) அமைந்துள்ள சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சித்தூர் மாவட்டத்தில் நேற்று 1,474 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பதியில் மட்டும் 382 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12-ந்தேதி முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

ALSO READ | COVID-19 பாதிப்பு அதிகரிப்பதால் இந்தியாவின் பல நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்

இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுப்பது குறித்து திருப்பதி மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த திருப்பதியில் இரவு நேர ஊரடங்கை இன்று முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இன்று இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை திருப்பதி நகரப் பகுதி முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும். 

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் வசதிக்காக திருப்பதி பஸ் நிலையத்திலிருந்து திருமலைக்கு மட்டும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News