உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் லிஸ்ட்! இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?

Worlds Happiest Countries 2024 List In Tamil : உலகின் பணக்கார நாடுகளின் லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. இதில், நம் நாட்டிற்கு எந்த இடம் கொடுக்கப்பட்டுள்ளது தெரியுமா? இங்கு பார்ப்போம்.   

Written by - Yuvashree | Last Updated : Mar 21, 2024, 03:48 PM IST
  • உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த கணக்கெடுப்பு
  • முதல் இடத்தில் எந்த நாடு உள்ளது?
  • இந்தியாவிற்கு எந்த இடம்?
உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் லிஸ்ட்! இந்தியாவிற்கு எந்த இடம் தெரியுமா?  title=

Worlds Happiest Countries 2024 List In Tamil : வருடா வருடம், உலகின் பணக்கார நாடுகள் யாவை என்பது குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். இந்த கணக்கெடுப்பு கடந்த 12 வருடங்களாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மார்ச் 20ஆம் தேதியான நேற்று உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து, ஐநா சபை சார்பாக உலகில் எந்த நாட்டை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சியா இருக்கிறார்கள் என்ற பட்டியல் வெளியாகும். அப்படி வெளியாகியுள்ள பட்டியலில் இந்தியாவிற்கு எந்த இடம் கிடைத்துள்ளது, எந்த நாடு முதல் இடத்தில் உள்ளது என்பதை இங்கு பார்ப்போம். 

முதல் இடத்தில் உள்ள நாடு..

இந்த ஆண்டின் மகிழ்ச்சியான மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் பின்லாந்து நாடுதான் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதுவரை வெளியான மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து இதோடு சேர்த்து 7வது முறையாக இடம் பெற்றிருக்கிறது. 

பின்லாந்து மக்கள் மகிழ்ச்சியாக இருக்க என்ன காரணம்?

பின்லாந்தை சேர்ந்த மக்கள், சமூகம் மற்றும் உறவின் வலுவான உணர்வு குறித்து நன்றாக உணரந்துள்ளதால் இவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக சில தத்துவ ஞானிகள் தெரிவிக்கின்றனர். மேலும், பின்லாந்து மக்கள், மற்றவர்களுக்காக பல நல்ல செயல்களைச் செய்வதாலும் தங்களுக்கென்று தெளிவான நோக்கத்தைக் கண்டறிந்து வாழ்வதாலும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் -உச்சநீதிமன்றம்

இந்தியாவிற்கு எந்த இடம்?

நம் நாடான இந்தியாவிற்கு மகிழ்ச்சியான மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் 126வது இடம் கிடைத்துள்ளது. கடந்த வருடமும் இந்தியா 126வது இடத்தில்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

எதன் அடிப்படையில் மகிழ்ச்சியான நாடுகள் கணக்கெடுக்கப்படுகிறது?

>சமூக ஆதரவு - மக்களின் மகிழ்ச்சி, அவர்கள் வாழும் சமூகம் அவர்களுக்கு எந்த அளவிற்கு உதவிகரமாக, ஆதரவாக இருக்கிறது என்ற அடிப்படையில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது
>மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் தனி நபர் வருமானம் (GDP Per Capita)-இது, மக்களை மகிழ்ச்சியாக வைத்துள்ளதா என கணக்கிடப்படுகிறது
>ஆரோக்கியமான வாழ்க்கை- மனதளவிலும் உடல் அளவிலும் மக்கள் ஆரோக்கியமாக இருக்கிறார்களா என இதில் கணக்கெடுக்கப்படுகிறது.
>வாழ்க்கை குறித்த முடிவுகள் எடுப்பதற்கு சுதந்திரம்-இதன் அடிப்படையிலும் மக்களின் மகிழ்ச்சி கணக்கெடுக்கப்படுகிறது.
>பெருந்தன்மை: மக்கள் எந்த அளவிற்கு சமூகத்தின் மீது அக்கறை கொண்டுள்ளனர் என்பதை கணக்கெடுக்கிறது
>ஊழல் குறித்த மனநிலை-ஒரு நாட்டின் அரசாங்கமும் வணிகக் கொள்கைகளும் எவ்வளவு ஊழல் நிறைந்தவையாக உள்ளது என்ற காரணியை வைத்து மகிழ்ச்சி கணக்கெடுக்கப்படுகிறது. 

முதல் 20 இடங்களில் இருக்கும் நாடுகள்..

1.பின்லாந்து
2.டென்மார்க்
3.ஐஸ்லாந்து
4.ஸ்வீடன்
5.இஸ்ரேல்
6.நெதர்லாந்து
7.நார்வே
8.லக்சிம்பர்க்
9.ஸ்விசர்லாந்து
10.ஆஸ்திரேலியா
11.நியூசிலாந்து
12.கோஸ்டா ரிகா
13.குவைத்
14.ஆஸ்திரியா
16.கனடா
17.அயர்லாந்து
18.செஸ்சியா
19.லிதுயானியா
20.இங்கிலாந்து (UK)

மேலும் படிக்க | ஜனநாயக படுகொலை செய்யும் பாஜக! அரிய செய்தியாளர் சந்திப்பில் சோனியா காந்தி குற்றச்சாட்டு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News