மகாத்மா காந்தியின் பேரனை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பரிந்துரைக்கும் இடதுசாரிகள்

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியின் பெயரை இடதுசாரி கட்சிகள் பரிந்துரைத்துள்ளன.  

Written by - Chithira Rekha | Last Updated : Jun 15, 2022, 03:13 PM IST
  • கோபால கிருஷ்ண காந்தியைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராகப் பரிந்துரைத்த இடதுசாரிகள்
  • எதிர்க்கட்சிகளின் ஒருமித்த வேட்பாளராக நிறுத்தப்படுவாரா?
  • கோபால கிருஷ்ண காந்தி காந்தி, ராஜாஜியின் பேரன் ஆவார்
மகாத்மா காந்தியின் பேரனை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பரிந்துரைக்கும் இடதுசாரிகள் title=

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 -ம் தேதியுடன் முடிவடைகிறது. நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள், ஜூலை மாதம் 21-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 

குடியரசுத் தலைவர் வேட்பாளரை பாஜக அறிவிக்காத நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரை தேர்வு செய்ய முயற்சித்து வருகின்றன. இதற்கென டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்களுடன் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். முன்னதாக டெல்லியில், தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை அவர் சந்தித்துப் பேசினார். 

மேலும் படிக்க | மம்தாவின் கூட்டத்தைப் புறக்கணித்த சந்திர சேகர ராவ்

எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக முதலில் சரத் பவாரின் பெயர் அடிபட்டது. ஆனால், தான் போட்டியிட விரும்பவில்லை என சரத் பவார் மறுத்து விட்டார். இந்த நிலையில், நேற்று சரத் பவாரை சந்தித்த இடதுசாரிக் கட்சித் தரப்பினர், மேற்கு வங்காள முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தியின் பெயரைப் பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. சரத் பவாரும் இந்த பரிந்துரையை எதிர்க்கவில்லை என கூறப்படுகிறது. 

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கோபால கிருஷ்ண காந்தி, அனைவருக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் நிலையில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக சம்மதமா எனத் தன்னிடம் கேட்கப்பட்டதாகவும், தான் யோசிக்க அவகாசம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார். கோபால கிருஷ்ண காந்தி கடந்த 2017-ம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் வெங்கையா நாயுடுவிடம் தோல்வியடைந்தார். 77 வயதான இவர், தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கான இந்திய ஆணையராகப் பணியாற்றியுள்ளார். இவர் மகாத்மா காந்தி மற்றும் ராஜாஜியின் பேரன் ஆவார்.

மேலும் படிக்க | குடியரசுத் தலைவருக்கான போட்டியில் இருந்து விலகிய 2 தலைவர்கள்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News