Delhi News In Tami: டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்க இயக்குனரகம் (ED) மூன்று முறை சம்மன் அனுப்பிய பிறகும், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் (AAP) தலைவருமான அரவிந்த்கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. தற்போது மீண்டும் அவருக்கு சம்மன் அனுப்பட்டது. டெல்லி மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜனவரி 18, வியாழக்கிழமை) அமலாக்க இயக்குனரக அலுவலகத்திற்கு செல்வாரா இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இன்னும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
சில நாட்களுக்கு முன்பு, விசாரணைக்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நான்காவது சம்மன் அனுப்பியது. ஜனவரி 18 ஆம் தேதி அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை உத்தரவிட்டிருந்தது. முன்னதாக நவம்பர் 2, டிசம்பர் 21 மற்றும் ஜனவரி 3 ஆகிய தேதிகளில் விசாரணைக்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அந்த மூன்று சம்மன்களையும் புறக்கணித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவை சட்டவிரோதமானது என்று கூறினார்.
ED அலுவலகத்திற்கு கெஜ்ரிவால் செல்வாரா? இல்லையா?
அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அரவிந்த் கெஜ்ரிவால் செல்வாரா? இல்லையா? என்பது குறித்து முதல்வர் அலுவலகம் இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், மதியம் 12 மணிக்கு, அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் கல்வித் துறை சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார். இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன், அரவிந்த் கெஜ்ரிவால் பகவந்த் மானுடன் கோவா செல்லலாம் எனக் கூறப்படுகிறது.
நேற்று அமலாக்கத் துறையின் நான்காவது சம்மன் குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கேட்கப்பட்டபோது, சட்டத்தின் கீழ் என்ன வேலை தேவையோ, அதை நாங்கள் சட்டத்தின்படி செய்வோம் என்றார்.
பாஜக பொய் வழக்குகள் போட்டு கைது செய்ய முயற்சி
பாஜக பொய் வழக்குகள் போட்டு என்னை கைது செய்ய நினைக்கிறது. எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மன்கள் சட்டவிரோதமானது என்று எனது வழக்கறிஞர்கள் என்னிடம் தெரிவித்தனர். லோக்சபா தேர்தலுக்கு முன், தனக்கு ஏன் சம்மன் அனுப்பப்பட்டது என கேள்வி எழுப்பிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 'விசாரணை நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில் விசாரணை அழைப்பு விடுவது ஏன்? இந்த விசாரணை சம்பந்தமாக 8 மாதங்களுக்கு முன்பே சி.பி.ஐ. அமைப்பிடம் பதில் சொல்லி விட்டேன். இப்போது லோக்சபா தேர்தலுக்கு முன் அழைக்கப்படுவதால், என்னை விசாரிப்பது அவரது நோக்கம் அல்ல. அவர்கள் என்னை அழைத்து கைது செய்ய விரும்புகிறார்கள். அதனால் என்னால் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்க முடியாது என்ற நோக்கத்தில் பாஜக செயல்படுகிறது என மூன்றாவது சம்மன் அனுப்பட்ட பிறகு கூறியிருந்தார்.
அமலாக்கத் துறை சம்மன் சட்டவிரோதமானது -அரவிந்த் கெஜ்ரிவால்
அமலாக்கத் துறை சார்பில் ஜனவரி 3 ஆம் தேதி ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மூன்றாவது சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அமலாக்கத் துறை அனுப்பிய சம்மன்களை சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டு ஆஜராகவில்லை. மேலும் அமலாக்கத் துறைக்கு கடிதம் அனுப்பினார்.
கடிதத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் எழுப்பிய கேள்விகள்
-- நான் ஏன் அழைக்கப்பட்டேன் என்பதற்கான விளக்கும் அமலாக்கத் துறை சம்மனில் எந்த தகவலும் இல்லை?
-- நான் தனிப்பட்ட முறையில் அமலாக்கத் துறையால் அழைக்கப்பட்டு இருக்கிறேனா? அல்லது தில்லியின் முதலமைச்சராகவா? அல்லது ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவா? எதன் அடிப்படையில் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்பது சம்மனில் தெளிவாகத் தெரியவில்லை
-- தெளிவான எந்த தகவலும் இல்லாத அத்தகைய சம்மன்கள் ஏற்கனவே நீதிமன்றத்தால் சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-- டெல்லியின் மூன்று தொகுதிகளில் ராஜ்யசபா தேர்தலில் பிஸியாக இருப்பதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டிருந்தார்.
-- முதலமைச்சராக இருப்பதால், ஜனவரி 26 ஆம் தேதிக்கான ஆயத்தப் பணிகளில் மும்முரமாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
-- ஊடகங்களில் அமலாக்கத் துறை சம்மன்கள் கசிந்ததை குறித்தும் அரவிந்த் கேஜ்ரிவால் எழுப்பிய அவர், "என் இமேஜை கெடுப்பதே அமலாக்கத் துறையின் நோக்கமா? எனக் கேட்டுள்ளார்.
-- அரவிந்த் கெஜ்ரிவால் தன்னை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்ததற்கான காரணத்தையும் கடிதத்தில் கேட்டிருந்தார்.
-- மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் அமலாக்கத் துறையிடமிருந்து எழுத்துப்பூர்வ கேள்விகளையும் கேட்டிருந்தார்.
-- சட்டப்படி அனைத்து வகையான விசாரணைகளிலும் பங்கேற்கத் தயாராக இருப்பதாக அமலாக்கத் துறையிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
-- சம்மன் அனுப்புவதற்கு அமலாக்கத் துறைக்கு உறுதியான காரணமும் நியாயமும் இல்லை என்றும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
-- சட்டத்தின்படியும் வெளிப்படைத் தன்மையோடும் செயல்படுமாறு அமலாக்கத் துறைக்கு அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் மூலம் அறிவுறுத்தியிருந்தார்.
மூன்று நாட்கள் கோவா செல்லும் அரவிந்த் கெஜ்ரிவால்
மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளைக் கருத்தில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலின் கோவா சுற்றுப்பயணம் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறார்.
ஜனவரி 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் கோவாவில் தங்கியிருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால், அங்கு ஆம் ஆத்மி கட்சியினரைச் சந்தித்து தேர்தல் திட்டம் குறித்து பேசவுளர். இதனுடன், பொது பேரணியிலும் கலந்துக்கொண்டு உரையாற்ற உள்ளார்.
மேலும் படிக்க - ஆம் ஆத்மி கட்சியை ஒழிக்க பிரதமர் மோடி விரும்புகிறார் -அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ