Budget 2023 Income Tax Changes, Sitharaman Speech Highlights: அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நடப்பு பாஜக ஆட்சியின் கடைசி முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.. அடுத்தாண்டு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.
விவசாயம் தொடங்கி தொழில்துறையில் இருந்து பல்வேறு துறை சார்ந்தவர்கள் இன்றைய மத்திய பட்ஜெட்டின் மீது பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதில், ரயில்வே துறை பட்ஜெட்டும் அடக்கம். பல ஆண்டுகளாக ரூ. 2.5 லட்சமாக உள்ள வருமான வரி விலக்காக வரம்பு, இந்தாண்டு அதிகரிப்படுமா என மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. வரி சார்ந்த முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
2023-2024 நிதியாண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். முன்னதாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நேற்று (ஜன. 31) தொடங்கியது. இக்கூட்டத்தொடர் மார்ச் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், இன்றைய பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு, அதன் மீதான விவாதம் நாளை முதல் நடைபெறும்.
பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்பட சர்ச்சை, அதானி - ஹிண்டன்பர்க் சர்ச்சை உள்ளிட்ட காரணங்கள் இன்றைய பட்ஜெட்டிலும், நடப்பு கூட்டத்தொடரிலும் எதிரொலிக்கும் என கூறப்படுகிறது. பட்ஜெட்டையொட்டிய இந்த காலகட்டத்தில், அரசியல் ரீதியாக எழுந்துள்ள இதுபோன்ற பிரச்னைகளை காங்கிரஸ், திமுக, திரிணாமூல், ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கிய எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தில் எழுப்ப காத்திருக்கின்றனர். அந்த வகையில், மத்திய பட்ஜெட் அறிவிப்புகளை உடனடியாக இங்கு காணலாம்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ