மக்களவை தேர்தல் 2019: 5 மணி நிலவரப்படி 96 தொகுதிகளில் 61.1 % வாக்குப்பதிவு

நாடு முழுவதும் நடைபெற்று வரும் 2ஆம் கட்ட மக்களவை தேர்தலில் மதியம் 2 மணி வரை 38.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 18, 2019, 06:35 PM IST
மக்களவை தேர்தல் 2019: 5 மணி நிலவரப்படி 96 தொகுதிகளில் 61.1 % வாக்குப்பதிவு title=

18:36 18-04-2019
நாடு முழுவதும் இரண்டாம் கட்ட தேர்தல் மாலை 5 மணிக்கு மேல் 61.1 சதவீதம் பதிவாகின என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இறுதி வாக்குப்பதிவு தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளது.


நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தலும் முடிந்த பிறகு மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

ஏற்கனவே முதற்கட்ட தேர்தலுக்கான வாக்குபதிவு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முடிவடைந்தது. அதில் 17 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 91 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் இன்று (ஏப்ரல் 18) தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 13 மாநிலங்கள் ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 97 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதேபோல தமிழகத்தின் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு நடந்து வருகிறது.

மக்களவை தேர்தலை பொருத்தவரை, தமிழகத்தில் 38 தொகுதிகளிலும், கர்நாடகாவில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 10 தொகுதிகளிலும், உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளிலும், அசாம், பீகார் மற்றும் ஒடிசா ஆகிய இடங்களில் 5 தொகுதிகளிலும், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீரில் 2 தொகுதிகளிலும், மணிப்பூர், திரிபுரா மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் 1 தொகுதிகளிலும் இரண்டாம் கட்ட வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணி வரை நாடு முழுவதும் நடைபெற்று வரும் 2 ஆம் கட்ட தேர்தலில் 38.31 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவரை அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் 51.68 சதவீதமும், குறைந்தபட்சம் ஜம்மு-காஷ்மீரில் 30.12 சதவீதமும் வாக்குகள் பதிவாகி உள்ளது.

Trending News