ராகுல் காந்தி கேரளாவை விடுத்து உத்தர பிரதேசத்தில் போட்டியிட வேண்டும்: CPI(M) காட்டம்

Lok Sabha Elections: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் பாஜகவை நேருக்கு நேர் எதிர்த்துப் போட்டியிடவில்லை என்று கேட்ட சுபாஷினி அலி, பாஜகவின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்றும் கூறினார்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Apr 2, 2024, 05:46 PM IST
  • இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களின் முதல் கட்ட வாக்குப்பதிவுது.
  • கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியும் அன்னி ராஜாவும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர்.
  • தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளராக கேரள மாநிலத் தலைவர் கே.சுரேந்திரனை அத்தொகுதியிலிருந்து பாஜக நிற்க வைத்துள்ளது.
ராகுல் காந்தி கேரளாவை விடுத்து உத்தர பிரதேசத்தில் போட்டியிட வேண்டும்: CPI(M) காட்டம் title=

Lok Sabha Elections: இன்னும் சில நாட்களில் நாடு முழுதும் மக்களவைத் தேர்தல்கள் நடக்கவுள்ள நிலையில், நாட்டின் மூலை முடுக்கெல்லாம் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரச்சாரங்கள் என நாடே களைகட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் தங்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டன. 

இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்குள் சில நெருடல்கள் புகைந்துகொண்டு இருக்கின்றன. கூட்டணி தலைவர்கள் கூட்டணியின் ஒற்றுமையை பற்றி தினமும் பேசினாலும், இதற்கு மாறான பல விஷயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. கேரளா, மேற்கு வங்கம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் தீர்க்க முடியாமல் தொடர்கின்றன. கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சவால் உருவாகி வருகின்றது. 

ராகுல் காந்தி பாஜக-வை ஏன் நேருக்கு நேர் எதிர்த்துப் போட்டியிடவில்லை? 

கேரளாவில் ஆளும் இடதுசாரி கட்சி தொகுதி பகிர்வை மறுத்து, ராகுல் காந்தியின் வயநாடு தொகுதியில் அவருக்கு எதிராக தனது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. வயநாடு மக்களவைத் தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) வேட்பாளர் அன்னி ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுவது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் (CPI (M)) தலைவர் சுபாஷினி அலி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏன் பாஜகவை நேருக்கு நேர் எதிர்த்துப் போட்டியிடவில்லை என்று கேட்ட சுபாஷினி அலி, பாஜகவின் கோட்டையான உத்தரப் பிரதேசத்தில் இருந்து ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்றும் கூறினார்.

“பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தை தாங்கள் முன்னின்று நடத்துவதாக காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது. அப்படி இருந்தால், பா.ஜ.க.வுடன் போட்டியே இல்லாத கேரளாவில் அவர்களது மிகப்பெரிய தலைவர் ஏன் தேர்தலில் போட்டியிடுகிறார்? பாஜகவுக்கு மிகப்பெரிய கோட்டையாக இருக்கும் உத்தரபிரதேசத்தில் அவர் போட்டியிட வேண்டும். அங்கு அவர் பாஜகவை தோற்கடித்தால், அதுதான் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்,” என்று சுபாஷினி அலி ANI இடம் கூறினார்.

வயநாட்டில் இருந்து தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ராகுல் காந்தி மக்களுக்கு என்ன செய்தியை கொடுக்க விரும்புகிறார் என ராகுல் காந்தி சிந்திக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார். முன்னதாக, அன்னி ராஜாவை எதிர்த்து வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியை கேரள முதல்வர் பினராயி விஜயனும் கடுமையாக விமர்சித்தார்.

மேலும் படிக்க | பாஜக வெற்றி பெற்றால் நாடு பற்றி எரியுமா? அவர்கள் மூட்டிய தீயை 10 ஆண்டுகளாக அணைத்து வருகிறேன் -மோடி

“தேசிய அளவில் பிரபலமான இடதுசாரித் தலைவரான அன்னி ராஜாவை எதிர்த்து ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அன்னி ராஜா மணிப்பூர் விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சியை (BJP) கடுமையாகக் கண்டித்தார். இதற்காக அவரை தேச விரோதி என்று கூறி தாக்கினார்கள். ஆனால் இதில் ராகுல் காந்தியின் பங்கு என்னவாக இருந்தது? நாட்டில் நடக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும் அன்னி ராஜாவின் பங்களிப்பை நாம் காண முடியும். ஆனால், காங்கிரஸின் முக்கிய தலைவரான ராகுல் காந்தியை இப்படிப்பட்ட போராட்டக்காரர்களுக்கு இடையில் பார்க்க முடிவதில்லை. " என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.

இன்னும் சில நாட்களில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களின் முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கவுள்ளது. கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியும் அன்னி ராஜாவும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளராக கேரள மாநிலத் தலைவர் கே.சுரேந்திரனை அத்தொகுதியிலிருந்து பாஜக நிற்க வைத்துள்ளது. 

மேலும் படிக்க | டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கிற்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News