Lok Sabha Election 2024: பிரதமர் நரேந்திர மோடியும் ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை_ நடைபெற்ற விஜய் சங்கநாத் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக தாக்கினார். இந்த தேர்தலில் நாட்டின் அரசியல் இரு அணிகளாக பிரிந்து நிற்பது போல் தெரிகிறது என்று பிரதமர் மோடி கூறினார்.
ஒரு பக்கம் நாங்கள் (பாஜக), மறுபக்கம் அவர்கள் (காங்கிரஸ்) -மோடி
ஒரு பக்கம் 'தேசம் தான் முக்கியம்' என்ற உறுதிமொழியுடன் செயல்படும் பாஜகவும், இன்னொரு பக்கம் நாட்டைக் கொள்ளையடிக்க வாய்ப்புகளைத் தேடும் காங்கிரஸ் கட்சியும் உள்ளன. உலக அளவில் நாட்டையே பெருமைப் படுத்தும் பாஜக.. மறுபுறம், வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டை துஷ்பிரயோகம் செய்யும் காங்கிரஸ் உள்ளது என்றார். கடந்த 10 வருடங்களில் நாம் என்ன செய்தோம் என்பது வெறும் டிரெய்லர் மட்டுமே, இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
காங்கிரஸ் ஊழல்வாதிகளை காப்பாற்றுங்கள் என்கிறது.. மோடி ஊழலை அகற்றுங்கள் என்கிறார்
பிரதமர் மேலும் கூறுகையில், "பாஜக வெற்றி பெற்றால் நாடு பற்றி எரியும் என சிலர் மிரட்டுகின்றனர். இவர்கள் மூட்டிய தீயை 10 ஆண்டுகளாக மோடி அணைத்து வருகிறார். தேர்தலில் வெற்றி பெறுமா? என காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மவுனம் காக்கும் முதல் தேர்தல் இதுவாகும். ஊழலுக்கு எதிரான நடவடிக்கையை தடுக்க ஊழல்வாதிகள் அனைவரும் ஒன்று திரளும் முதல் தேர்தல் இதுவாகும். அவர்கள் (காங்கிரஸ்) ஊழல்வாதிகளை காப்பாற்றுங்கள் என்கிறார்கள், ஊழலை அகற்றுங்கள் என்று மோடி கூறுகிறார். இதுபோன்ற முதல் தேர்தல் இதுவாகும். இதில் பெரிய காங்கிரஸ் தலைவர்கள் தேர்தலில் வெற்றி பெறுவது பற்றி பேசாமல், நாட்டையே அச்சுறுத்தி வருகின்றனர். பாஜக வெற்றி பெற்றால் நாடு தீப்பற்றி எரியும் எனக் கூறி வருகின்றனர்" என்றார்.
மேலும் படிக்க - பாஜகவை அதிமுக விமர்சிக்காது... காரணத்தை ஓபனாக சொன்ன எடப்பாடி பழனிசாமி
10 साल में जो हुआ, वो तो सिर्फ ट्रेलर है।
अभी तो बहुत कुछ करना है, अभी तो हमें देश और राजस्थान को बहुत आगे लेकर जाना है।
BJP सरकार का तीसरा कार्यकाल ऐतिहासिक और निर्णायक फैसलों के कार्यकाल होने वाला है।
- पीएम @narendramodi pic.twitter.com/BTkkWjVrX3
— BJP (@BJP4India) April 2, 2024
எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது
எதிர்க்கட்சிகளை தாக்கி பேசிய பிரதமர், "காங்கிரஸ் கட்சியினர் தங்களின் ஆபத்தான எண்ணங்களை வெளிப்படுத்த ஆரம்பித்து விட்டனர். எனவே, நாட்டைக் காப்பாற்ற உங்கள் எதிர்கால சந்ததியினரின் மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானது. சுதந்திரம் அடைந்து ஏழு தசாப்தங்களுக்குப் பிறகும் காங்கிரஸால் நாட்டில் வறுமை இருந்தது" என்றார்.
நமது ராணுவத்தை தன்னிறைவு அடைய காங்கிரஸ் அனுமதிக்கவே இல்லை
அவர்களால் (காங்கிரஸ்) புதிய தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுக்காக இந்தியா மற்ற நாடுகளை நோக்கிப் பார்க்க வேண்டியிருந்தது என்றார். இதே காங்கிரஸ், நமது ராணுவத்தை தன்னிறைவு அடைய அனுமதிக்கவே இல்லை. காங்கிரஸின் காலத்தில், இந்தியா உலகின் மிகப்பெரிய ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக அறியப்பட்டது. ஆனால் இன்று பாஜக ஆட்சியில் இந்தியா ஆயுத ஏற்றுமதி நாடாக உலக அரங்கில் அடையாளப்படுத்தப்படுகிறது.
நோக்கம் சரியாக இருந்தால் முடிவு சரியாக இருக்கும்.
பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியில் இந்தியா நேற்று புதிய சாதனை படைத்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்வது இதுவே முதல் முறை. இன்று இந்தியா 80க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை விற்பனை செய்கிறது. எனவே மீண்டும் சொல்கிறேன், நோக்கம் சரியாக இருந்தால் முடிவு சரியாக இருக்கும்.
விவசாயிகளுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்
காங்கிரஸ் விவசாயிகளின் குரலை ஒருபோதும் கேட்கவில்லை. ராஜஸ்தானில் உள்ள 85 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு சம்மன் நிதி திட்டத்தின் கீழ் 20 ஆயிரம் கோடி ரூபாயை மோடி அனுப்பியுள்ளார். உங்கள் கனவு மோடியின் உறுதி எனக் கூறினார் பிரதமர் நரேந்திர மோடி.
மேலும் படிக்க - 'மக்களவை தேர்தலில் போட்டியிட பணமில்லை...' நிர்மலா சீதாராமன் கூறும் காரணங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ