முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்... கடைசி நேர ட்விஸ்ட்: ரேபரேலியில் ராகுல், அமேதியில் கேஎல் சர்மா

Lok Sabha Elections: நீண்டகாலமாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலிருந்து போட்டியுடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 3, 2024, 09:19 AM IST
  • நீண்டகாலமாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வந்தது.
  • மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலிருந்து போட்டியுடுவார்.
  • அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கிஷோரி லால் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார்.
முடிவுக்கு வந்த சஸ்பென்ஸ்... கடைசி நேர ட்விஸ்ட்: ரேபரேலியில் ராகுல், அமேதியில் கேஎல் சர்மா title=

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் யார் போட்டியிடுவார்கள்? காங்கிரஸ் கட்சியின், குறிப்பாக காந்தி குடும்பத்தின் கோட்டையாக கருதப்படும் இவ்விரு தொகுதிகளில் இம்முறையும் காந்தி குடும்ப உறுப்பினர்கள்தான் களm இறங்குவார்களா? கடந்த மக்களவைத் தேர்தலில் அதிர்ச்சி தோல்வியுற்ற ராகுல் காந்தி இம்முறை அங்கு போட்டியிடுவாரா? இப்படி பல கேள்விகள் நீண்ட நாட்களாக இருந்த வந்த நிலையில், காங்கிரஸ் கட்சி அதற்கான விடையை இன்று அளித்து விட்டது. 

நீண்டகாலமாக நீடித்து வந்த சஸ்பென்ஸ் இன்று முடிவுக்கு வந்தது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியிலிருந்து போட்டியுடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேதி, ரேபரேலிக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஸ்மிருதி இரானிக்கு எதிராக அமேதியில் காங்கிரஸ் கட்சி கே.எல்.சர்மாவை வேட்பாளராக நிறுத்தியுள்ளது.

அமேதி, ரேபரேலி: காங்கிரஸ் கோட்டைகள்

அமேதி மற்றும் ரேபரேலி ஆகியவை காந்தி-நேரு குடும்பத்தின் பாரம்பரிய ஆதிக்கம் உள்ள கோட்டைகளாகக் கருதப்படுகின்றன. ஏனெனில் இவர்களது குடும்ப உறுப்பினர்கள் பல தசாப்தங்களாக இந்த தொகுதிகளின் பிரதிநிதிகளாக இருந்து வருகிறார்கள். 

முன்னதாக, ராகுல் காந்தி அமேதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் நேற்று தெரிவித்திருந்தன. எனினும், காங்கிரஸின் முதல் குடும்பத்திடமிருந்து இறுதி ஒப்புதல் பெற்றபின் இறுதி அறிவிப்பு வரும் என கூறப்பட்டது. தினம் தினம் சஸ்பென்ஸ் அதிகரித்துக்கொண்டிருந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், 'யாரும் பயப்பட வேண்டாம்' என்றார். அமேதி மற்றும் ரேபரேலி வேட்பாளர்களை இறுதி செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு கட்சியின் மத்திய தேர்தல் குழு (சிஇசி) அதிகாரம் அளித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

எந்த அச்சமும் இல்லை: ஜெயராம் ரமேஷ்

காங்கிரஸ் சார்பில் இறுதி அறிஇவிப்பு வருவதற்கு முன்னதாக, ஜெய்ராம் ரனேஷ் நேற்று, “அடுத்த 24-30 மணி நேரத்தில் காங்கிரஸ் தலைவர் இறுதியாக எடுக்கப்படும் முடிவை அறிவிப்பார் என்பது எனது எதிர்பார்ப்பு. அது வரை வெளிவரும் அனைத்து தகவல்களும் போலியானவையே" என்று கூறியிருந்தார்.

முடிவெடுப்பதில் ஏன் தாமதம் ஏற்படுகிறது என்றும், ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை களமிறக்க காங்கிரஸ் அச்சப்படுகிறதா என்றும் கேட்கப்பட்ட கேள்விக்கு, “எந்த தாமதமும் ஏற்படவில்லை. ரேபரேலியில் பாஜக வேட்பாளர்களை அறிவித்திருக்கிறதா? ஸ்மிருதி இரானி ஒரு சிட்டிங் எம்.பி. என்பதால் அங்கு அவர்களுக்கு தேர்வு எளிதானது. எங்களுக்கு அச்சமில்லை. பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதில் முடிவெடுக்க காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.

மேலும் படிக்க | ஆந்திராவில் போலீஸ் சோதனையில் 2000 கோடி பணத்துடன் சிக்கிய 4 கண்டெய்னர்கள்!

ராகுல்தான் இங்கே வேண்டும்: கோரிக்கை வைத்த அமேதி காங்கிரஸ் தொண்டர்கள்

உத்தரப்பிரதேச மாநிலத் தலைமை ஏற்கனவே மத்திய தேர்தல் குழு மற்றும் கட்சித் தலைமையிடம் ராகுல் காந்தியை அமேதியிலும், பிரியங்கா காந்தி வதேராவை ரேபரேலியிலும் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தது. அமேதியிலிருந்து ராகுல் காந்திதான் போட்டியிடுவார் என்ற ஊகங்கள் அதிகரித்த நிலையில், செவ்வாயன்று அமேதியில் காங்கிரஸ் தொண்டர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராகக் கட்சி முன்னிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

அமேதி மக்களவைத் தொகுதி

அமேதி மகக்ளவைத் தொகுதியை காங்கிரஸ் சார்பில் 2004 முதல் ராகுல் காந்தி பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். 2019 ஆம் ஆண்டு அவர் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் தோற்கடிக்கப்பட்டதற்கு முன்னர், தொடர்ந்து மூன்று முறை அந்தத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ராகுல் காந்தி தற்போது கேரளாவின் வயநாடு தொகுதியின் எம்.பி ஆக உள்ளார். அவர் 2019 மக்களவைத் தேர்தலில் அங்கிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

ரேபரேலி மக்களவைத் தொகுதி

ரேபரேலி மக்களவைத் தொகுதியை 2004 முதல் சோனியா காந்தி பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறார். அதற்கு முன், சோனியா காந்தி அரசியலில் நுழைந்ததும், அவர் அமேதி தொகுதியில் முதன் முறையாக 1999 இல் போட்டியிட்டார். இதற்கு முன்பு அங்கு சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் எம்பி-களாக இருந்தனர். 

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ், அங்கு 17 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அமேதி மற்றும் ரேபரேலியில் வாக்குப்பதிவு எப்போது?

அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு மக்களவைத் தேர்தலின் 5 ஆம் கட்டத்தில், மே 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும். இத்தொகுதிகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும். நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடக்கும் 2024 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

மேலும் படிக்க | Covid தடுப்பூசி சான்றிதழில் இருந்து பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் நீக்கம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News