இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் வெளிநாட்டு சிறப்பு விருந்தனர்கள் இல்லை: MEA

2021ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக சுரிநாம் நாட்டின் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி (Chandrikapersad Santokhi) கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியானது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 14, 2021, 08:23 PM IST
  • இந்த வருட குடியரசு தின (Republic Day) விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
  • பிறகு, குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக சுரிநாம் நாட்டின் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகிகலந்துகொள்வார் என தகவல்கள் வெளியானது.
  • குடியரசு தினத்தில் எந்த வெளிநாட்டு விருந்தினரும் கலந்து கொள்ளாதது 55 ஆண்டுகளில் முதல் முறையாகும்.
இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் வெளிநாட்டு சிறப்பு விருந்தனர்கள் இல்லை: MEA title=

குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும், வெளிநாட்டு தலைவர்களுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும். கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அந்த வகையில், இந்த வருட குடியரசு தின (Republic Day) விழாவில் கலந்து கொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், பிரிட்டனில் உருமாறிய கொரோனா (Corona Virus) மிக வேகமாக பரவி வரும் நிலையில், அங்கு வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளதால், அவர் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகி,  அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது.  இதற்காக அவர், பிரதமர் நரேந்திர மோடியுடன் (PM Narendra Modi) தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளாததற்கு வருத்தமும் தெரிவித்தார்.

பிறகு,  2021ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக சுரிநாம் நாட்டின் அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி (Chandrikapersad Santokhi) கலந்துகொள்வார் என தகவல்கள் வெளியானது.

வெளியுறவுத் துறை அமைச்சின் (MEA) செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், "உலகளாவிய COVID -19 நிலைமை காரணமாக, இந்த ஆண்டு நமது குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக ஒரு வெளிநாட்டு தலைவர் அல்லது அரசுத் தலைவர் யாரும் கலந்து கொள்ள மாட்டார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதது” எனக் கூறினார்.

இது கடந்த 55 ஆண்டுகளில் முதல் முறையாகும்.  குடியரசு தினத்தில் எந்த வெளிநாட்டு விருந்தினரும் கலந்து கொள்ளாதது வரலாற்றில் இது நான்காவது முறையாகும். 1966 ஆம் ஆண்டில், அதற்கு முன்னர் 1953 மற்றும் 1952 ஆம் ஆண்டுகளில் நடந்த குடியரசு தின விழாவில், வெளிநாட்டை சேர்ந்த எவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | குடியரசு தின விழா சிறப்பு விருந்தினராக சுரிநாம் அதிபர் கலந்து கொள்கிறார்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News